jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சினிமா செய்திகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சினிமா செய்திகள் แสดงบทความทั้งหมด

ஜீவா ஜோடி


"ஜக்குபாய்', "சிக்குபுக்கு' படங்களின் ரிலீசை எதிர்பார்த்திருக்கும் ஸ்ரேயா, தற்போது "ரவுத்திரம்' என்ற படத்துக்கு ஜீவாவின் ஜோடியாக்கப்பட்டுள்ளார். மற்ற மொழிகளில் வந்த வாய்ப்புகளை விட்டு தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் இன்னும் தமிழை சரியாக பேச கற்றுக் கொள்ளாமல்தான் இருக்கிறார். ""இங்கு ஒரு படத்தை ஆரம்பிப்பதும் தெரியாது. முடிப்பதும் தெரியாது. விரைவாக தமிழில் மட்டும்தான் படம் எடுக்கிறார்கள். ரஜினியுடன் "சிவாஜி' படத்தில் நடித்த பின்தான் நிறைய தமிழ் ரசிகர்களுக்கு என்னைத் தெரிய ஆரம்பித்தது'' என்கிறார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈழத்துக்கும் ஆயிரத்தில் ஒருவனுக்கும் சம்மபந்தமில்லை : செல்வராகவன்



ர‌ஜினிகாந்த் படம் பார்த்து பென்டாஸ்டிக் என்று பாராட்டியதுதான் ஆயிரத்தில் ஒருவன் டீமின் சமீபத்திய சந்தோஷம். பேன்டஸியா ஒரு படம் எடுத்தா விமர்சனம்ங்கிற பெயர்ல போஸ்ட்மார்டம் பண்ணுறாங்களே என்பது செல்வராகவனின் ஆதங்கம்.

படத்தின் பிரஸ்மீட்டிலும் இது பிரதிபலித்தது.

ஹாலிவுட்டில் அவதார் படம் எடுத்தா லா‌ஜிக் பார்க்காம பாராட்டுறீங்க. தமிழ்ல அப்படி ஒரு முயற்சி பண்ணுனா ஆயிரம் லா‌ஜிக் மிஸ்டேக் பார்க்கு‌றீங்க. ஒரு தமிழனா நான் எடுக்கிற முயற்சிக்கு நீங்க ஆதரவு தரணும் என்றார் செல்வராகவன். பேச்சில் நிதானம் அளவுக்கு சோகமும் கலந்துகட்டியிருந்தது.

வெளிநாட்டில் படம் பார்த்திட்டு பாராட்டுறாங்க என்ற உப‌ரி தகவலையும் பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டார்கள்.

படத்தில் தான் காட்டியது வரலாற்றில் வாழ்ந்த சோழனில்லை, அது கற்பனை அரசன்தான் என்று மீண்டும் அழுத்தமாக தெ‌ளிவுப்படுத்தினார் செல்வராகவன்.

படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் ஈழப் பிரச்சனையை நினைவுப்படுத்துகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அப்படியெதுவுமில்லை, ஈழப் பிரச்சனைக்கு முன்பே நான் அந்தக் காட்சிகளை எடுத்துவிட்டேன் என்றார்.

இதுவும் வரலாற்று பிழைதான். ஈழப் பிரச்சனை என்ன போன வருடமா தொடங்கியது. முப்பதாண்டு நெடிய போராட்டமல்லவா அது?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நானும் செல்வாவும்... போட்டு தாக்கும் ரீமாசென்


எதிரும் புதிரும், சண்டக்கோழி இப்படி என்ன டைட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ரீமாசென்-செல்வராகவன் பிரண்ட்ஷிப்புக்கு!

அப்படி ஒரு 'படார் திடீர்' பாசம் இருக்கிறது இருவருக்குள்ளும். ஒரு நாள் பேசாவிட்டாலும் எதையோ இழந்தது போலாகிவிடுவாராம் ரீமாசென்.

"எங்க ரெண்டு பேருக்குள்ளே ஆயிரம் சண்டை வந்தாலும் அவர்தான் என் பிரண்ட். என்னுடைய பாசிட்டிவ், நெகட்டிவ் எல்லாம் தெரிஞ்சவர் அவர்தான்" என்று கூறியிருக்கிறார் ரீமா. (ஹ¨ம், அப்படி போவுதா ரூட்?) இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஆன்ட்ரியா நடித்திருக்கிறார். இருவரில் யாருக்கு முக்கியத்துவம் என்ற கேள்வியை ரீமாவிடம் கேட்டால், "படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனால் நான் இந்த படத்தில் செகண்ட் ஹீரோயின் அல்ல" என்கிறார்.

தமிழ்ல இவருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'கல்யாணம்'. "அப்படி என்ன வயசாயிடுச்சு?" என்று கேட்டலாவது எதையாவது சொல்லி சமாளிக்கலாம். ஆனால், "கல்யாணத்தை பற்றி நான் சிந்தித்ததே இல்லை" என்றால் என்ன செய்வதாம்? காதல், கல்யாணம், இதுக்கெல்லாம் இந்த வருஷத்தில் இடமும் இல்லை. நேரமும் இல்லை என்கிறார் ஒரே போடாக!

இன்னும் ஆட்டம் போட வேண்டியது எவ்வளவோ இருக்கே?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்

நவீன தொழில் நுட்பத்தை தனது படங்களில் புகுத்தி தமிழ் சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர் என்றால் மிகையாகாது. கிராபிக்ஸை படங்களில் சரியாக பயன்படுத்துவது முதல் காமிரா ஆங்கிள்கள் வரை இவரது பிரம்மாண்டத்துக்கு இந்தியா சினிமாவில் ஈடு இணையில்லை.

கடின உழைப்பு மற்றும் இடையறாத முயற்சி மூலம் ஷங்கர் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார்.

அவரின் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் பட பிடிப்புகள 90ம% ஷூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்திரன் பட அசத்தலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… இவருக்குள் இருக்கும் இளமையை வெளியே கொண்டுவந்து நமக்கு விருந்து வைத்தமைக்கு ஷங்கருக்கு?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மறுபடியும் மர்மயோகி கைமாற்றிவிட்ட கமல்!


மருதநாயகம், மர்மயோகி என்று மெகா பட்ஜெட்டில் இறங்கும் போதெல்லாம் ஜகா வாங்க வைக்கிறது விதி. இன்னமும் மருதநாயகத்தை மறக்கவே இல்லை கமல்.
அப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளை மர்மயோகியில் பயன்படுத்துவார் என்று காத்து கிடந்தார்கள் ரசிகர்கள். ஆனால், அந்த மகா கலைஞனின் கனவில் அங்கங்கே பொத்தல்கள்! எல்லாவற்றையும் சரி செய்து அவரது கனவை மீட்டெடுக்க கை கொடுத்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ்.

அப்படியா?

ஆமாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். மர்மயோகியை பொறுத்தவரை கால் கிணறு தாண்டியிருக்கிறார் கமல். லொக்கேஷனிலிருந்து, லோடு பாய் வரை ரெடி. கிளாப் கட்டையை தூக்கிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில் விழுந்த முட்டுக்கட்டையை வலுவான கரம் ஒன்று அகற்ற முன்வந்தால் பயணத்தில் வேகம் பிடிக்கும் என்று காத்திருந்தார். இவர் நினைத்த மாதிரியே எந்திரன் முடிந்ததும் அதே அளவு பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறதாம் சன்.

இடையில் உதயநிதி தயாரிப்பில் ஒரு படமும், துரை.தயாநிதி தயாரிப்பில் ஒரு படமும் நடிக்கப் போகிறார் கமல் என்பது நம்பகமான தகவல்!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமன்னாவுக்கு வலைவீசும் ரேனிகுண்டா டைரக்டர்

ரேனிகுண்டா என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் தான் அடுத்து தெலுங்கில் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தமன்னாவுக்கு வலைவீசியிருக்கிறார்.
ரேனிகுண்டா வெற்றியைத் தொடர்ந்து 18 வயசு என்ற ‌படத்தை இயக்கி வருகிறார் பன்னீர் செல்வம். ரேனிகுண்டாவில் நாயகனாக நடித்த ஜானிதான் இந்த படத்திலும் ஹீரோ. 18 வயசைத் தொடர்ந்து பன்னீர்செலவம் தெலுங்கில் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான ரோஹித்தான் நாயகனாம். நாயகியாக நடிக்க தமன்னாவிடம் கேட்டிருக்கிறாராம் பன்னீர். ஆனால் அம்மணி இப்போது தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் தெலுங்கு படத்தை ஒப்புக் கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

பாஸிட்டாவான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார் டைரக்டர் பன்னீர்செல்வம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிகினிக்கு புது அர்த்தம் சொல்லும் நீது சந்திரா


பிகினி உடை அணிந்ததற்கு புது அர்த்தம் சொல்கிறார் நடிகை நீது சந்திரா. யாவரும் நலம் படத்தில் ஹோம்லியான பெண்ணாக நடித்த நீது சந்திரா, இப்போது விஷாலுடன் ஜோடி போட்டிருக்கும் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பிகினியில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டால் புதுமையான விளக்கம் கொடுக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இந்தியில் மிர்ச் மசாலா படத்தில் அறிமுகமானேன். அந்த படத்தில் டூ-பீஸ் உடையணிந்து கவர்ச்சியாக நடித்தேன். தமிழில் யாவரும் நலம் படத்தில் ஹோம்லியாக நடித்தேன். தெலுங்கில் அறிமுகமான சந்யமேவ ஜயதே படத்திலும் ஹோம்லி வேடம்தான். எனது ‌ஹோம்லி இமேஜை உடைப்பதற்காகத்தான் இப்போது தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பிகினியில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்திருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிறிஸ்துமஸ் விழாவில் நமீதா, ரீம்மா, சோனியா அகர்வால்


சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் நடிகைகள் நமீதா , ரீம்மா (ரீமா சென்தான்), சோனியா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் வந்து விட்டது. சென்னையில் கிறிஸ்துமஸையொட்டி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன.

சென்னையில் இதுபோன்ற ஒரு கிறிஸ்துமஸ் சிறப்பு பார்ட்டியில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அஜீத், ஷாலினி ஜோடி படு ஜாலியாக, கண் கவர் உடையில் பார்ட்டிக்கு வந்திருந்தது. சிவப்பு நிற கெளனில் ஷாலினி ஜொலித்தார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உற்சாகத்துடன் போட்டோகிராபர்களுக்குப் போஸ் கொடுத்தார். கணேஷ் வெங்கட்ராமன் தனது நண்பர் ஒமருடன் வந்திருந்தார்.

நமீதா, சோனியா அகர்வால் மற்றும் ரீமா ஆகியோரும் டிசைனர் உடைகளில் வந்து கலக்கினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐனவரி 21&ல் நவ்யா திருமணம்


நவ்யா நாயர்& சந்தோஷ் மேனன் திருமணம் ஜனவரி 21ம் தேதி கேரளாவில் நடக்கிறது.
‘அழகிய தீயே’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘மாயக்கண்ணாடி’, ‘சில நேரங்களில்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நவ்யா நாயர். கேரளாவை சேர்ந்த இவருக்கும் மும்பையில் வசிக்கும் சந்தோஷ் மேனனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 21&ம் தேதி, கேரள மாநிலம் ஆலப்புழா அருகிலுள்ள சேப்பாடு என்ற ஊரில் திருமணம் நடைபெறுகிறது. அன்று மாலை சங்கனாச்சேரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இத்திருமணம் பற்றி நவ்யா நாயர் கூறும்போது,’’ இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க, வருங்கால கணவர் அனுமதி கொடுத்துள்ளார். தற்போது மலையாளத்தில் சுரேஷ்கோபி, மம்மூட்டி ஆகியோர் படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் ‘கவுரவர்கள்’ படத்தில் நடிக்கிறேன்’’ என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இன்டர்நெட்டில் ஒரு இன்சல்ட்


முத்தழகி இப்படி வெத்தழகியாவார் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? போனால் போகிறதென்று அவர் கொஞ்சம் டிரஸ்சும் போட்டு நடித்த படம் துரோணா. நீச்சல் உடை என்றாலே அபாயம்தான். அதிலும் அவர் அணிந்திருந்தது அபாயகரமான நீச்சல் உடை!

ஏற்கனவே கரிப்பு. இதில் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்ந்தது போல ஒரு தப்பு நடந்துவிட்டதாம் ஷ§ட்டிங்கில். குளிக்கிற நேரத்தில் ஆடை கொஞ்சம் அப்பட்டமாகவே விலகி விட, எல்லா அழகையும் ஏலம் போட்டது அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில். அதைதான் நெட்டில் உலவ விட்டு பட்டைய கிளப்பிவிட்டார்கள் சில நெட்டர்கள்!

“எனக்கு எட்டு மொழி தெரியும். அநேகமா எல்லா மொழியிலும் நான் பிஸி. (இந்த மாதிரி படத்துக்கு, மொழி எதுக்குங்கக்காவ்…?) அந்த பொறாமையில்தான் இப்படியெல்லாம் கிளப்பிவிடுறாங்க. மார்பிங் சமாச்சாரம்தான் அந்த ‘விலகல்’ படம். ஷ¨ட்டிங் எடுக்கும்போது எந்த தப்பும் நடந்திடாதபடி நான் கவனமாகதான் நடிச்சிருந்தேன்” என்கிறார் ப்ரியாமணி.

எரிச்சலை கிளப்பி புகைச்சலை வாங்குறதே பொழப்பாப் போச்சு சில பேருக்கு
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

2 வருடத்துக்குப் பின் தான் நடிப்பேன்-கோபிகா


நான் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன்.. இனி 2 ஆண்டுக்கு ஒருமுறைதான் படம் நடிப்பேன், என்று தெரிவித்துள்ளார் நடிகை கோபிகா. ஆட்டோகிராமப் மூலம் அறிமுகமான கோபிகா, தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். நல்ல மார்க்கெட் இருந்தபோதே, கடந்த வருடம் (2008) ஜுலை 27ம் தேதி அகிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் டாக்டராக இருக்கிறார் அகிலேஷ். மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார் கோபிகா. திருமணத்துக்குப்பின் கணவருடன் அயர்லாந்தில் குடியேறிய கோபிகா, அதே வேகத்தில் மீண்டும் கேரளாவுக்கு வந்துவிட்டார். வந்த கையோடு தனது திருமண சபதத்தை தூக்கிப் போட்டுவிட்டு, 2 மலையாளப் படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் அயர்லாந்து சென்றார். இப்போது ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக கோபிகா சென்னை வந்தார். இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, விளம்பர படத்தில் நடித்து முடித்தார். கேரளாவில் இருந்து அவருடைய பெற்றோரும் வந்திருந்தனர். படப்பிடிப்பு முடந்ததும் இந்த முறை கேரளா செல்லவில்லை அவர். அயர்லாந்துக்கு புறப்பட்டார், சென்னையிலிருந்தே. புறப்படும் முன் அவர் அளித்த பேட்டியில், “திருமணத்துக்குப்பின், நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் இருந்தேன். என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால், 2 மலையாள படங்களில் மட்டும் நடித்தேன். இந்த விளம்பரப் படம் முன்பே நான் ஒப்புக் கொண்டது. அதனால்தான் வந்து நடித்துக் கொடுத்தேன். அதற்காகத்தான் நான் சென்னை வந்தேன். அயர்லாந்தில், நான் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் என்னிடம் மிகுந்த பிரியத்துடன் நடந்து கொள்கிறார். இப்போது நான், 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். குழந்தையின் நலன் கருதி, இனிமேல் 2 வருடங்களுக்கு பிறகுதான் நடிப்பேன்” என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விருதுகளை நோக்கி தமன்னா


அடுத்த சிம்ரன் என்று எந்த நேரத்தில் அறிவித்தாரோ? ஷங்கரின் வாய் முகூர்த்தப்படியே, சிம்ரன் ஸ்டைலில் விருதுகளை அள்ள ஆரம்பித்திருக்கிறார் தமன்னா. முன்னவர் வாங்கிய சாந்தாராம் விருது தமன்னாவுக்கும் கிடைத்திருப்பதுதான் இன்னும் ஒரு ஒற்றுமை. தெலுங்கில் இவர் நடித்த 'கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்' என்ற படத்திற்காகத்தான் இந்த விருது.

பிரபல இந்திப்பட இயக்குனர் வி. சாந்தாராம் நினைவாகத் தரப்படும் விருது இது. நன்றாக நடிப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த விருது தரப்படுமாம். வேறெந்த பிலிம் காட்டுகிற வேலையும் இந்த விருதைப் பொறுத்தவரை இருக்காது என்பதால், இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டதுமே வாழ்த்துக்களைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்களாம் தமன்னாவுக்கு. "எல்லாரும் இந்திக்கு போயிட்டாங்க. இங்கே இருக்கக்கூடிய ஒரே நடிகை அவங்கதான்" என்று சிம்பு பாராட்டியிருந்தார்.

விருதுகளை நோக்கி தமன்னா அடியெடுத்து வைத்திருப்பதை பார்த்தால் சிம்புவின் மகிழ்ச்சியும் நீடிக்காது போலிருக்கிறதே?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

படுக்கை அறை காட்சி... நமீதா மறுப்பு!


18 வயசுப் பையனுடன் படுக்கையறைக் காட்சியில் நடிக்க மறுத்து விட்டாராம் நமீதா .

மலையாளத்தில் முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ரதி நிர்வேதம் என்ற படத்தை தமிழில் அழகான பொண்ணுதான் என தமிழில் உல்டாவாக்கி எடுத்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடிக்கிறார் நமீதா.

ஒரு காட்சியில் விபச்சார விடுதியில் உள்ள மற்ற பெண்களை விட்டுவிட்டு, நமீதாவை தேர்ந்தெடுக்கிறான் 18 வயசு பையன் (ஹீரோ).
இந்த படுக்கையறைக் காட்சியில் நடிக்க முடியாது என ஆரம்பத்தில் நமீதா மறுத்து விட்டாராம்.

"நான் சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜீத் ஆகியோருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருக்கிறேன். பதினெட்டு வயது பையனுடன் நடிப்பது வசதியாக இல்லை" என மறுத்துள்ளார் நமீதா.

உடனே படத்தின் இயக்குநர் திரு, நமீதாவைச் சமாதானப்படுத்தி, "முதல் 'ஷாட்'டை படமாக்கிப் பார்ப்போம். மானிட்டரில் பார்த்து உங்களுக்கு திருப்தியாக இருந்தால் தொடர்ந்து எடுப்போம்" என்றாராம்.

அதன்பிறகு நமீதா அந்த காட்சியில் நடிக்க ஆரம்பித்தார். முதல் 'ஷாட்'டை மானிட்டரில் பார்த்த அவர், தொடர்ந்து நடிக்க மறுத்து விட்டார்.

இந்தக் காட்சியில் நமீதாவுடன் நடித்தவர் கார்த்தீஸ் என்ற இளைஞர். நமீதா நடிக்க மறுத்ததில் பெரும் ஏமாற்றமடைந்தாராம் அவர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விஜய்யின் வேட்டைக்காரன் கேரளா-கர்நாடகத்தில் சாதனை!


விஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.

இந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்டார்.

கேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே. 120 திரையரங்குகளில் சிவாஜி வெளியானது!

அதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய் யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் போக்கிரி கேரளாவில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது நினைவிருக்கலாம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிகினியில் ஸ்னேகா: ஜிவ்வென்று உயரும் சம்பளம்


ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளம் உயரும் என்பது தமிழ் சினிமா விதி. இந்த விதிக்குத் தப்பாத நாயகிகளே கிடையாது… கேபி சுந்தராம்பாள் தவிர!

பக்கத்து வீட்டுப் பெண் இமேஜை கட்டிக் காப்பதில் குறியாக இருந்த சினேகவுக்கு இந்த உண்மை புரியத் துவங்கியதுமே, அவரது ஆடையின் அளவும் குறையத் தொடங்கிவிட்டது.

தெலுங்கில் ஹாட் ஸ்னேகாவாக வலம் வந்தவர், அதே தரிசனத்தை தமிழில் காட்டத் துவங்கிவிட்டார்.

இதனாலேயே, பெரிய வெற்றிப் படம் எதிலும் நடிக்காவிட்டாலும், அவரது சம்பளமும் குறையாமல் இருந்து வருகிறது.

இப்போது வரவிருக்கும் கோவா படத்தில் பிகினியில் வலம் வருகிறாராம் ஸ்னேகா. இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஸ்டில்களை ஆரம்பத்தில் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தக் கூடாது என கூறிவந்தவர், இப்போது பரவாயில்லை பயன்படுத்துங்க என்று தாராள அனுமதி தந்துவிட்டாராம்.

ஒரு பக்கம் படத்துக்கு பப்ளிசிட்டி… மறுபக்கம் தனது சம்பளத்தை உயர்த்த ஒரு டெக்னிக் என்ற உண்மை புரிந்ததால் இந்த திடீர் தாராளமாம்!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எந்திரன் படப்பிடிப்பு முடிந்தது!


ரஜினி நடிக்க சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் எந்திரன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

படத்துக்கான பேட்ச் அப் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினி இந்தப் படத்துக்கு டப்பிங் பேசி வருகிறார்.

ரூ 180 கோடியில் தயாராகிவரும் எந்திரன் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஒரு வருடத்துக்கு மேல் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வாரம் முடிவடைந்தது.

இப்படத்தில் ரோபோ, விஞ்ஞானி என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. ரோபோட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தி பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்துக்கு சவுன்ட் டிசைனராக பணியாற்றுகிறார்.

படப்பிடிப்பு முடிந்தாலும், இன்னும் இரு பாடல்கள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை புனே மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. பின்னர் கிராபிக்ஸ் பணிகள் பாக்கியுள்ளன.

இன்னும் இருபது நாட்களில் ரஜினியின் டப்பிங் பணிகள் முடிந்ததும், வெளிநாட்டுக்குப் பறக்கும் எந்திரன் குழு, பாடல் காட்சிகளை முடித்துக் கொண்டு திரும்புகிறது. படம் வெளியாவது சித்திரைத் திருநாளிலா... தீபாவளிக்கா என்பது இன்னும் முடிவாகவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மும்பை தொழிலதிபருடன் நந்திதாதாஸ் ரகசிய திருமணம்!


இந்தியில் 1996ல் ஃபயர் என்ற படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் தமிழில் அழகி போன்ற மென்மையான படங்களில் தோன்றிய நந்திதா தாஸ் மும்பை தொழிலதிபர் சுபோத் மஸ்காரா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கெனவே தனது நெருங்கிய நண்பராக இருந்த சல்மயா சென் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் மும்பை தொழில் அதிபர் சுபோத் மஸ்காரா என்பவருடன் நந்திதாவுக்கு காதல் மலர்ந்தது. தொழில் அதிபரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளனராம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அஜீத் ஜோடி ஆவாரா ஷம்மு?


பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘காஞ்சிவரம்’ படத்தில் நடித்தவர் ஷம்மு. தெலுங்கில் பிஸியாக இருக்கும் இவர் தமிழில் பிரகாஷ்ராஜின் ‘மயிலு’, நந்தா பெரியசாமியின் ‘மாத்தி யோசி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து இவருக்கு, அஜீத் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஷம்மு கூறுகையில்,
“மயிலு’ படத்தின் படப்பிடிப்பு முடிய இருக்கிறது. இதில், நான் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். நந்தா பெரியசாமியின் ‘மாத்தி யோசி’ வெளியிடலுக்கு காத்திருக்கிறது. காஞ்சிவரம் படத்திற்கு அடுத்ததாக நிறைய கதைகள் கேட்டு விட்டேன். தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் கேட்டார்கள். தெலுங்கில் மூன்று படங்களில் புக் ஆகி உள்ளதால் தமிழ் வாய்ப்புகளை இழந்துவிட்டேன். தமிழ் சினிமாத்தான் பிடித்திருக்கிறது. ‘காஞ்சிவரம்’போன்ற கேரக்டர் ரோலில் நடிக்க விருப்பம் இருக்கிறது” என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐஸ்வர்யா ராய்-சல்மான் காதல் கதை படமாகிறது!


பாலிவுட்டில் புயல் கிளப்பிய சல்மான்கான் - ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம் சுஜாப் ஹை இஷ்க் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது.

சல்மானும் ஐஸும் லவ்விக் கொண்டிருந்த அந்த ஆரம்ப நாட்களில் இருவரைப் பற்றியும் தினமும் ஒரு செய்தி அல்லது கார சாரமான கிசுகிசு வந்தவண்ணமிருக்கும். அடிக்கடி ஐஸ்வர்யாவின் படப்பிடிப்புகளில் போய், அவருடன் நடிக்கும் ஹீரோக்களைக் கலாய்ப்பது சல்மானுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு .

இப்படித்தான் ஒருமுறை ஷாரூக்கானுடன் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் சல்மான் தகராறு செய்ய, குறுக்கே வந்த ஷாரூக்கை அறைந்தார்.

ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் போய் பல முறை நள்ளிரவில் கலாட்டா செய்தார். 'இந்த சல்லு ரொம்பத்தான் லொள்ளு' என்ற முடிவுக்கு வந்த ஐஸ், விவேக் ஓபராயுடன் நெருக்கமானார். பின்னர் அவரையும் ஜஸ்ட் லைக் தட் கழற்றிவிட்டு, அபிஷே பச்சனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய திரையுலக வருவாயில் 75% ஈட்டுவது தென்னிந்தியப் படங்களே!


சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.

படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும் அவர்கள் காலம் காலமாக பார்த்து வருகின்றனர். ஒதுக்கியே வைத்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குப் போய் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாவா என்று கேட்கும் அளவுக்கு பாலிவுட்டினர் வெளிநாடுகளில் இந்திப் போர்வையை போர்த்தி இந்திய சினிமாவை மறைத்து வைத்துள்ளனர்.

ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. இந்தியத் திரையுலகினர் ஈட்டும் வருவாயில் கிட்டத்தட்ட 75 சதவீத வருவாய், தென்னிந்திய சினிமா மூலமாகவே கிடைக்கிறதாம். சொச்ச வருவாயை மட்டுமே பாலிவுட் தருகிறது.

அந்தக் கதையைக் கேளுங்கள்...

அடக்கமாக இருந்து அட்டகாசமான ஹிட்களை மட்டுமே கொடுப்பது இந்தியாவிலேயே தென்னிந்திய சினிமா மட்டும்தான். உண்மையில் பாலிவுட்டை இந்த விஷயத்தில் ரொம்ப தூரத்திற்குத் தூக்கிப் போட்டு மூலையில் முடக்கியுள்ளது தென்னிந்திய சினிமா.

தரத்திலும் சரி, படங்களின் வருவாயிலும் சரி, அதிக அளவில் படம் எடுப்பதிலும் சரி தென்னிந்திய சினிமாதான் டாப்பில் உள்ளது.

தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய சினிமா திரையுலகமும் சேர்ந்து இந்திய திரையுலக வருவாயில் நான்கில் மூன்று மடங்கை ஈட்டுகின்றன. 2008-09ம் ஆண்டில், இந்த நான்கு திரையுலகமும் சேர்ந்து ஈட்டிய வருவாய் என்ன தெரியுமா, ரூ. 1700 கோடிக்கும் மேல்.

இந்தியில் தயாரிக்கப்படும் படங்களை விட தெலுங்கில்தான் அதிக எண்ணிக்கையி்ல் படங்கள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தெலுங்கில் 230 படங்கள் ரிலீஸாகின.

இந்த புள்ளி விவரங்களை இந்திய தொழில் வர்த்தக சபையும், எர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனமும் தெரிவித்துள்ளன.

சுருக்கமாக சொன்னால் ஸ்கிரிப்ட் முதல் ஸ்கீரின் வரை இந்திய திரையுலகின் ஆதிக்கம் தெற்கில்தான் இருக்கிறது- அனைவரும் கருதுவது போல பாலிவுட்டில் அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னகத் திரையுலகம் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை மறுபேச்சு பேசாமல் தன் வசப்படுத்திக் கொள்வதில் தெற்கத்திக்காரர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.

ஸ்பெஷல் எபக்ட்ஸ் முதல் அனிமேஷன் வரை அத்தனை நவீன தொழில்நுட்பும் தெற்கில் உள்ளது. குறிப்பாக தமிழும், தெலுங்கும் இந்த்த தொழில்நுட்பங்களை மிகப் பெரிய அளவில் பயன்படுத்துகின்றன.

இந்தியாவுக்கு சமீபத்தில் கிடைத்த ஆஸ்கர் விருதுகளில் 3 விருதுகளை தட்டிச் சென்றவர்கள் தென்னகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றம் ரசூல் பூக்குட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி என ஏராளமான சூப்பர் ஸ்டார்களைக் கொண்டுள்ள தென்னகத் திரையுலகம், வித்தியாசமான கதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தயக்கமே காட்டுவதில்லை. விதவிதமான பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இங்கு பஞ்சமே இல்லை.

ஒரு படத்தை எப்படி வெற்றிப் படமாக்குவது என்ற பார்முலா இங்குள்ளவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவின் இந்த பிரமாண்ட வருவாய் ஈட்டல் குறித்து எர்னஸ்ட் நிறுவன பங்குதாரர் பரூக் பல்சாரா கூறுகையில், இங்கு திரைப்பட வர்த்தகம் மிகச் சிறப்பாக உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு திறம்பட செயல்படுகிறார்கள்.

படம் வெளியாகி குறைந்தது ஒரு வருடம் வரை அந்தப் படம் டிவியில் ஒளிபரப்பப்படுவதில்லை. இதனால் தியேட்டர்களுக்கு பலன் கிடைக்கிறது. தென்னிந்தியத் திரையுலகம் ஈட்டியுள்ள ரூ. 1700 கோடியில், ரூ. 1300 கோடி, தியேட்டர் வசூல் மூலம் கிடைத்தவையாகும். இந்தியாவில் உள்ள மொத்தத் திரைகளில் பாதி அளவு தென்னிந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 7 கோடிக்கு மேற்பட்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் அளவு 45 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவின் பிற பகுதிகளில் தென்னிந்திய மொழிப் படங்கள் பெரிய அளவில் முத்திரை பதிக்காவிட்டாலும் கூட இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் இவற்றின் வருவாய் மிகப் பெரிய அளவை எட்டியுள்ளது முக்கியமானது.

தமிழ் திரைப்படங்களின் வசூலில் நான்கில் ஒரு மடங்கு வெளி மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாநிலங்களில் மட்டுமே உலவி வரும் இந்த தென்னிந்திய மொழிப் படங்கள் சர்வதேச அரங்கில் மிகப் பெரிய பங்காற்றும் வாய்ப்பு நிறையவே உள்ளது. ஹோம் வீடியோ போன்றவை மூலம் அதை சாதிக்க முடியும்.

திறமையாளர்கள், தொழில்நுட்ப விரும்பிகள், மாற்றங்களை நேசிப்பவர்கள் இங்கு நிறையப் பேர் உள்ளதால் இது எளிதில் சாத்தியமாகக் கூடிய ஒன்று.

பாலிவுட்டில் உள்ளதைப் போல, தெற்கிலும், நடிகர்கள், 30 சதவீத அளவுக்கு ஊதியத்தை உயர்த்தியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அவர்கள் ஊதியத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளது.

தென்னிந்திய மொழிப் படங்களின் வருவாயில் தலா 45 சதவீதத்தை தமிழும், தெலுங்கும் ஈட்டுகின்றன. அதாவது 90 சதவீதம் இந்த இரு மொழிப் படங்கள் மூலம் தான் ஈட்டப்படுகிறது. மலையாளத் திரையுலகின் மூலமான வருவாய் 8 சதவீதமாக உள்ளது. கன்னடத் திரையுலகின் பங்கு வெறும 2 சதவீதம் தான் என்றார் பல்சாரா.

இந்த வருவாய் குறித்த அறிக்கை இன்று சென்னையில் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டின்போது வெளியிடப்படவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates