ஐனவரி 21&ல் நவ்யா திருமணம்
நவ்யா நாயர்& சந்தோஷ் மேனன் திருமணம் ஜனவரி 21ம் தேதி கேரளாவில் நடக்கிறது.
‘அழகிய தீயே’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘மாயக்கண்ணாடி’, ‘சில நேரங்களில்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நவ்யா நாயர். கேரளாவை சேர்ந்த இவருக்கும் மும்பையில் வசிக்கும் சந்தோஷ் மேனனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 21&ம் தேதி, கேரள மாநிலம் ஆலப்புழா அருகிலுள்ள சேப்பாடு என்ற ஊரில் திருமணம் நடைபெறுகிறது. அன்று மாலை சங்கனாச்சேரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இத்திருமணம் பற்றி நவ்யா நாயர் கூறும்போது,’’ இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க, வருங்கால கணவர் அனுமதி கொடுத்துள்ளார். தற்போது மலையாளத்தில் சுரேஷ்கோபி, மம்மூட்டி ஆகியோர் படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் ‘கவுரவர்கள்’ படத்தில் நடிக்கிறேன்’’ என்றார்.
0 Response to "ஐனவரி 21&ல் நவ்யா திருமணம்"
แสดงความคิดเห็น