jkr

தனயனைக் காப்பாற்ற தன்னுயிர் ஈந்தத் தாய்!


பொலிசாரிடமிருந்து தன் மகனைக் காப்பாற்ற தன் உயிரையே ஈந்துள்ளார் ஒரு தாய்.

பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன், 'கொகேன்' போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.

இதை அறிந்த பொலிசார் அவனைத் தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே பொலிசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்குப் பொலிசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகேன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.

அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் பொலிசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.

உடனே, அம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஅந்தத் தாய் மரணமானார். தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர் தனது இன்னுயிரையே மாய்த்துக் கொண்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தனயனைக் காப்பாற்ற தன்னுயிர் ஈந்தத் தாய்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates