விருதுகளை நோக்கி தமன்னா
.jpg)
அடுத்த சிம்ரன் என்று எந்த நேரத்தில் அறிவித்தாரோ? ஷங்கரின் வாய் முகூர்த்தப்படியே, சிம்ரன் ஸ்டைலில் விருதுகளை அள்ள ஆரம்பித்திருக்கிறார் தமன்னா. முன்னவர் வாங்கிய சாந்தாராம் விருது தமன்னாவுக்கும் கிடைத்திருப்பதுதான் இன்னும் ஒரு ஒற்றுமை. தெலுங்கில் இவர் நடித்த 'கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்' என்ற படத்திற்காகத்தான் இந்த விருது.
பிரபல இந்திப்பட இயக்குனர் வி. சாந்தாராம் நினைவாகத் தரப்படும் விருது இது. நன்றாக நடிப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த விருது தரப்படுமாம். வேறெந்த பிலிம் காட்டுகிற வேலையும் இந்த விருதைப் பொறுத்தவரை இருக்காது என்பதால், இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டதுமே வாழ்த்துக்களைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்களாம் தமன்னாவுக்கு. "எல்லாரும் இந்திக்கு போயிட்டாங்க. இங்கே இருக்கக்கூடிய ஒரே நடிகை அவங்கதான்" என்று சிம்பு பாராட்டியிருந்தார்.
விருதுகளை நோக்கி தமன்னா அடியெடுத்து வைத்திருப்பதை பார்த்தால் சிம்புவின் மகிழ்ச்சியும் நீடிக்காது போலிருக்கிறதே?







0 Response to "விருதுகளை நோக்கி தமன்னா"
แสดงความคิดเห็น