தமன்னாவுக்கு வலைவீசும் ரேனிகுண்டா டைரக்டர்

ரேனிகுண்டா வெற்றியைத் தொடர்ந்து 18 வயசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பன்னீர் செல்வம். ரேனிகுண்டாவில் நாயகனாக நடித்த ஜானிதான் இந்த படத்திலும் ஹீரோ. 18 வயசைத் தொடர்ந்து பன்னீர்செலவம் தெலுங்கில் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான ரோஹித்தான் நாயகனாம். நாயகியாக நடிக்க தமன்னாவிடம் கேட்டிருக்கிறாராம் பன்னீர். ஆனால் அம்மணி இப்போது தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் தெலுங்கு படத்தை ஒப்புக் கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.
பாஸிட்டாவான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார் டைரக்டர் பன்னீர்செல்வம்.
0 Response to "தமன்னாவுக்கு வலைவீசும் ரேனிகுண்டா டைரக்டர்"
แสดงความคิดเห็น