jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜெனரல் சரத் பொன்சேகா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜெனரல் சரத் பொன்சேகா แสดงบทความทั้งหมด

ஹோட்டலிலிருந்து சரத் வெளியேற்றம் : இந்தியாவிடம் உதவி கோரவும் முடிவு


சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம் உதவி கேட்க சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவு வெளியான சிறிது நேரத்தில், சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை இராணுவம் முற்றுகையிட்டது.

இதனால், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலத்துக்கு இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கப் போவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது குறித்துக் கூறுகையில்,

"சரத் பொன்சேகா, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவின் தூதரக அதிகாரிகளை சந்தித்து, பொன்சேகாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா - சரத் பொன்சேகா சந்திப்பு


எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல், ஹொரகொல்லையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ளது.
ஹொரகொல்லையில் உள்ள, முன்னாள் பிரதம மந்திரி எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்கள் இடையில் கடவத்தை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் தடுக்கப்பட்டதாகவும் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சந்திரிகா பண்டாரநாயக்கவை சரத் பொன்சேகா சந்தித்தமையானது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சந்திரிகாவுக்கு விசுவாசமான தரப்பினர் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வாக்குகளை சரத் பொன்சேகாவுக்கு பெற்றுக்கொடுக்கச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரிக்கா குமாரதுங்க, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசார மேடைகளில் ஏறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அவர் அதனை மேற்கொள்ளாத நிலையில், எனினும் நேற்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர் நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குடும்ப ஆட்சி, ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக இந்த ஆட்சி மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ள அவர், இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செயற்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் இன்று சரத் பொன்சேகா அவரை சந்தித்திருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொய் கூறி ஏமாற்றுவோரை மக்கள் நம்பக் கூடாது : நிட்டம்புவையில் ஜெனரல் சரத்


வெறும் பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, எந்தவொரு முக்கியமான தீர்மானம் எடுக்கும் போதிலும் முதலில் நாட்டைப் பற்றிச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிட்டம்புவையில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

"நான் என்னுடைய கொள்கைகளை மிக எளிதான முறையில் முன்வைத்துள்ளேன். உங்களைத் திசை திருப்புவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கவில்லை. அவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்டும் பார்த்தும் ஏமாற வேண்டாம்.

சுயநலங்களைத் தவிர்த்து நாட்டுக்காக செயற்படுபவர்கள் யாரென்பதை இனங்காண வேண்டும். நீங்கள் தீர்மானம் எடுக்கும்போது நாட்டைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுத்தத்தைப் போன்று நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் : ஜெனரல் சரத்


யுத்தத்தில் வெற்றிகொண்டது போல நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"நிறைவேற்று அதிகாரத்தால் துஷ்பிரயோகம் தான் நடக்கிறது. அதனை இல்லாதொழித்து ஜனநாயத்தை நிலைநாட்டுவதையே எனது முதற்கடமையாக கொண்டுள்ளேன்.

என்னுடன் இணைந்துள்ளவர்கள் ஊழல்களுடன் தொடர்புபட்டவர்கள் அல்லர். தூய்மையான கரங்களும் நல்ல எண்ணங்களும் இருந்தால் நாட்டை ஊழல்களிலிருந்து நிச்சயம் பாதுகாக்கலாம். நடைமுறை அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாது.

ஆட்சி மாற்றம் ஒன்று இப்போது இடம்பெறாவிட்டால், இனி எக்காலத்திலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

10 பிரதான அம்சங்களுடன் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் சமர்ப்பிப்பு


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம், 'நம்பிக்கைமிக்க மாற்றம்' என்ற தொனிப் பொருளில் 10 பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இன்று முற்பகல் கொழும்பு இன்டர் கொன்டினெண்டல் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

01. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பி சமாதானத்தை முறையாகப் பேணல்
02. ஊழல்,விரயங்களை முற்றாக இல்லாதொழித்தல்
03. நெருக்கமான உறவுகளைப் பேணி அனைத்து குடும்பங்களுக்கும் தேவையானவற்றை செய்தல்
04. வாழ்க்கைச் செலவை குறைத்தல்
05. நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல்
06. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல்
07. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் கௌரவமான நிலைமையைத் தோற்றுவித்தல்
08. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்
09. காத்திரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அடித்தளம் அமைத்தல்
10. நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தல்

மேற்கண்ட 10 அம்சங்களையும் அவற்றுக்கான விளங்கங்களையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் துரித மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளவுள்ள 7 படிமுறைகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சிங்களவருக்கு மட்டுமே நாடு சொந்தம் என்று கூறவில்லை : சரத் பகிரங்க அறிவிப்பு


ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ,நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் தெரிவிக்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம். முபீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர் தான் தெரிவித்த கருத்து அந்த ஊடகத்தில் திரிபுபடுத்தப்டப்டிருந்ததாகவும் கூறினார்.

"இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்" என்றும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் .இதனைத் தான் அரசியல் யாப்பும் உறுதிப்படுத்துகின்றது.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு, வடக்கு கிழக்கு மக்கள் ஏனைய மக்கள் போல சம அந்தஸ்துடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. அதாவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினையும் உரிமையையும் உறுதிப்படுத்துவது" என்றும் குறிப்பிட்டார்.

1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை,குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவுபடுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் பின் கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட, பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்முனை செல்லும் வழியில் ஆரையம்பதி கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலய முன்றலில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளை அசைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து சரத் வெளியேற்றம்


உயர்நீதிமன்ற உத்தரவின்படி எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறினார்.

எனினும் அது தொடர்பில் அவர் சட்டமா அதிபருக்கு அறிவிக்கவில்லை என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் உத்தியோகபூர்வமாகத் தமது வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறியமைக்கான அறிவித்தலை குறித்த தரப்புகளுக்கு அறிவித்த பின்னரே அது தொடர்பாக ஆதனங்கள் மதிப்பீடு செய்யப்படும் என இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இந்த வாசஸ்தலத்தில் இருந்து ஜெனரல் பொன்சேகா வெளியேறியுள்ள நிலையில் அதில் தற்போதைய இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய குடியேறவுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஊடகவியலாளர்களைக் கொன்றவர்களை அம்பலப்படுத்த முடியும் : சரத்


கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை யார் படுகொலை செய்தார்கள் என்ற விபரங்களை அம்பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், இந்தக் கொலைகளின் பின்னணியில் யார் செயற்பட்டார்கள் என்பதனை விசாரணை செய்து 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவிலாளர்களின் படுகொலைகளின் பின்னணியில் தாம் செயற்பட்டதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாகவும், தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 24 மணித்தியாலங்களுக்குள் உண்மையான குற்றவாளிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்த முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அரச ஊடகவியலாளர்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும், அரசியல் சார்பாக செயற்பட்டு வரும் அரச ஊடகங்களை பக்கச் சார்பற்ற சுயாதீன அமைப்பாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சியை முன்னெடுக்க உள்ளதாக தம் மீது குற்றம் சுமத்தி வரும் அரசாங்கமே இராணுவ ஆட்சிக்கான முனைப்பு காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

24 இராணுவ அதிகாரிகளுக்கு அரச உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், நான்கு மேஜர் ஜெனரல்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு மாவட்ட அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்......

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். முற்பகல் 10.00 மணிக்கு யாழ் நகரத்திற்கு அருகிலும், பிற்பகல் 3.00 மணிக்கு நல்லூர் கோயிலுக்கு அருகிலும் நடைபெறும் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் நாளை மறுதினம் முற்பகல் 10.00 மணிக்கு வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் சரத் பொன்சேக்கா பிற்பகல் 3.00 மணிக்கு வவுனியாவில் நடைபெறும் பொதுக் கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஏகாதிபத்தியவாதத்திற்கு முடிவுகட்டலாம்- எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா


ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஊழல் மோசடி மிகுந்த ஏகாதிபத்தியவாதத்துக்கு முடிவு கட்டிவிடலாம். அத்துடன், ஆளும்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்டுப்பணமும் இல்லாமல் போகும். எனவே, நல்லாட்சியை நோக்கிய எமது பயணத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால், நாட்டுக்கு தேவையான ஜனநாயகமும் சமாதானமும் உறுதிப்படுத்தப்படுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுகின்ற கழிவுகளே குன்றுகளாக குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை மேற்கொள்ளும்போது எனது கைகளும் சேறாகும் என்பதை உணர்ந்துள்ளேன். இருந்தும் அது குறித்து நான் கவலைப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி மக்கள் பிரிவு அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன்

எனது 40 வருட இராணுவ சேவை காலத்தில் நான் அரசியலுக்குள் வருவேன் என்பதை சிந்தித்திருக்கவில்ல. சீருடை அணிந்த இராணுவ அதிகாரியாக அதுவும் அரச ஊழியராகவே இருந்து இறுதியில் மக்களின் எதிர்பார்ப்பான நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு எனக்கு அளித்திருந்த பொறுப்பையும் நிறைவேற்றி இருக்கின்றேன். இவ்விடயங்களை மக்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர். எனினும், இந்நாட்டுக்கு தேவையான வேறுபல எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வெளியாரை திருப்திப்படுத்தும்மீள்குடியேற்ற நடவடிக்கை

ஜனநாயகம், சமாதானம், சகவாழ்வு என்பவற்றுக்கான அடித்தளம் இடப்படவில்லை. அதுமட்டுமல்லாது யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ்மக்களின் நிலைமைகள் உணர்வு பூர்வமாக அணுகப்படவில்லை. அவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அந்த மக்கள் பலவந்தமாகவும் அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைக்காகவுமே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்தும் வெளியாரை திருப்திப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது.

குடும்ப அபிவிருத்தியேபிரதானம் நாட்டின் அபிவிருத்தி குறித்து சிந்திக்காதவர்கள் குடும்ப அபிவிருத்தியையே பிரதானமாக கொண்டு தங்களது ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த எமக்கு அபிவிருத்தி என்ற பேரில் பூச்சாண்டி காட்டினர். யுத்த நடவடிக்கைகளின் போது தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக போராடிய வீரர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்ற இராணுவ வீரர்கள் அங்கவீனமுற்றோர் தொடர்பில் இன்றைய அரசாங்கம் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் சிந்திக்கவேண்டிய தேவை எமக்கு இருந்தது. எனினும், அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை.

என்னை அர்ப்பணித்துள்ளேன்

இந்த சந்தர்ப்பத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மனோ கணேசன் எம்.பி. மற்றும் ரவூப் ஹக்கீம் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ள 12க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதுடன் மக்களுக்கு என்னால் முடியுமான சேவையை செய்வதற்கு என்னை அர்ப்பணித்துள்ளேன்.

துர்நாற்றக் கழிவுக் குன்றுகள்

இந்த நாட்டில் கடந்த 4 வருடங்களாக சேர்க்கப்பட்ட துர்நாற்றக் கழிவுக் குன்றுகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்த பணியில் இறங்கியிருக்கும் என்மீது அரசாங்கம் சேறுபூசிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார மேடைகளில் எதிர்க்கட்சியினரால் தனக்கு சேறுபூசப்படுவதாக கத்திக் கொண்டிருக்கிறார். நாம் இதுவரையில் அவர் மீது சேறு எதுவும் பூசவில்லை. நாட்டில் நடக்கின்ற ஊழல் மோசடிகள், வீண்விரயங்கள் குறித்து பகிரங்கப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமையாகும். அதனை மேற்கொள்ளும்போது தனக்கே சேறுபூசப்படுவதாக கூறிக்கொள்வதற்காக எம்மால் ஒன்றும் சொல்லமுடியாது.

அரசியல் பழிவாங்கல்

நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கடத்திச் சென்று பாதுகாப்பு செயலாளரின் முன்னால் நிறுத்தி அவரை அச்சுறுத்தியுள்ளமையானது மிகவும் மோசமான விடயமாகும். அதேபோல், எனது பிரசார மேடையில் தோன்றிய வண. தம்பர அமில தேரரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் ஆகும். இது இவ்வாறிருக்க இன்னும் பத்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் அநாகரிகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமான தேர்தலுக்கு செல்வதற்காக அல்ல என்பது நிரூபணமாகின்றது. அதுமட்டுமல்லாது தேர்தல்களை நிறுத்தி பலவந்தமாக பதவியை அடைவதற்கே ஆளும்தரப்பு வேட்பாளர் முயற்சிக்கின்றார்.

மங்கள தோல்வியடையவில்லை

அரசாங்கத்தின் இந்த அநியாயங்களை பொறுத்துக் கொள்ள முடியாதமையாலேயே மங்கள சமரவீர எம்.பி. தனது பதவியையும் துறந்து கட்சியில் இருந்து வெளியேறினார். இவர்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பாடுபட்டவர். இதனை மறந்த மஹிந்த ராஜபக்ஷ, மங்கள சமரவீர எம்.பி.யை துச்சமாக நினைத்து அவரை வெளியேற்றி விட்டார். மங்கள எம்.பி.யினால் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தேர்தலும் தோல்வியடையவில்லை. வெற்றி மாத்திரமே அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் அவர் இன்று என்னுடன் இணைந்திருப்பது எனது வெற்றியையும் உறுதிபடுத்தியிருக்கின்றது. மங்கள எம்.பி.யை வெளியேற்றிய ராஜபக்ஷ நிருவாகம் போதைவஸ்து வியாபாரிகளையும் ஊழல் மோசடிக்காரர்களையுமே இன்றும் அருகில் வைத்து கொண்டு செயற்படுகின்றது. இதற்கு முடிவு கட்டப்படவேண்டும்.

தொலைகாட்சியில் மாத்திரமே அதிகாரி

என்மீது சேறுபூசியும் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்ற ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் எனக்கு இராணுவத்தை வழிநடத்தக் கூடிய தலைமைத்துவம் இருக்கின்றது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவினால் தொலைக்காட்சி நாடகத்தில் மாத்திரமே இராணுவ அதிகாரியாக தோன்ற முடியும் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டமைக்கு நாமே காரணம். ஆனால், அந்த வெற்றி தனக்கே உரித்தானது என மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

சிறுபான்மையினரை வென்றுவிட்டோம்

எமது பயணத்தின் குறுகிய காலத்திற்குள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொண்டு விட்டோம். அவர்களது ஒட்டுமொத்த வாக்குகளும் எமக்கே என்பது இப்போதே உறுதியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி மாத்திரமே சேவையில் இருக்கும் பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் கிராமங்களுக்கு எமது பிரசார நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் அதனால், கிராமத்தவர்களின் வாக்குகள் எமக்கு கிடைக்கப்போவதில்ல என்றும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பிரசார பயணம் கிராமங்களுக்கும் செல்லும் என்பதையும் அவர்களின் மனங்களையும் வெல்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், எமது பிரசாரங்கள் கிராமங்களுக்கு சென்றடைய இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரும் உதவி புரிவர் என நம்புகின்றேன். இன்று நாம் நாட்டின் அநேகமான பகுதிகளை வென்றுவிட்டோம் என்றே கூறவேண்டும்.

வெற்றி நிச்சயம்

வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களில் 80 வீதமானோர் வாக்களிப்பார்களேயானால் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதுடன் மோசடி மிக்க ஏகாதிபத்திய அதிகாரத்தையும் இல்லாதொழிக்க முடியும். அத்துடன், ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமான ராஜபக்ஷவின் கட்டுப்பணத்தையும் அவர் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு செய்ய முடியும்.

நல்லெண்ணம் கிடையாது

எந்தவொரு நல்ல அரச தலைவரும் நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்களிப்பை மிகவும் விரும்புவõர். மகிழ்ச்சியடைவார். ஆனால், இன்றைய அரச தலைவருக்கு 80 வீதமான வாக்குகளை மக்கள் அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கிடையாது. அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி வாக்கு வீதத்தை தடுப்பதற்கு நினைப்பதானது ஒரு நாட்டின் அரச தலைவருக்கு பொருத்தமானது அல்ல. எனவே, இந்நாட்டுக்கு தகுதியான தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளரைக் காணவில்லையாம்


தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்து வந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியைக் கடந்த இரண்டு நாட்களாக மறைத்து வைத்துள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறுகிறார்.

இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்திற்குச் சென்ற அவர் இந்த முறைப்பாட்டை அங்கு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், தமது தேர்தல்பிரசார நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம்


எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கொள்கைப் பிரகடனத்தை கண்டியில் வெளியிட்டு வைத்தார்.

அதன் தமிழாக்கம் வருமாறு:

01. இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே, முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று,

* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

02. நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

03. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.

04. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்...

05. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

06. முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

07. ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

08. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

09. நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

10. கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு


வரலாற்றில் நான் பயங்கரவாதத்தை வென்றவன் மக்கள் என்னை சுற்றியிருப்பதனால் ஜனநாயகத்தையும் வெற்றிகொள்வேன். என்று எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மத்தியிலிருந்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில், மக்கள் என் பின்னால் திரண்டிருக்கின்றனர். பயங்கரவாத்தை தோல்வியடையச் செய்த நான் ஜனாநாயகத்தையும் வெற்றிக்கொள்வேன். அதன் மூலமாக நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போன். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது- ஜெனரல் சரத் பொன்சேகா


தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தேசத்துரோகியென சேறுபூசுகின்றனர் என்று ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாகுமென்றும் அவர் கூறினார். பிட்ட கோட்டே சோலீஸ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிச் சென்று அங்கு கணனி இயக்குநராக பணிபுரிந்து விட்டு இன்று நாடு திரும்பியவர் எனக்கு இராணுவத் தளபதி பதவியை பெற்றுக் கொடுத்ததாகவும் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கணனி இயக்குநர்களுக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே வழங்கப்படும்.இவ்வாறான ஒருவர் எனக்கு பயிற்சி அளித்ததாக கூறுகிறார். அத்தோடு, நான் ஓய்வு பெறவிருந்த போது எனக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டதாகவும் தற்போது பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இராணுவத் தளபதி பதவி எனக்கு வழங்கப்படும் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே ஆட்சியிலிருந்தார். அவர் அரசாங்க மற்றும் படை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதினை 58 ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். எனக்கு தற்போது 56 வயதாகும். எனவே, ஓய்வுபெறும் போது எனக்கு தளபதி வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எதுவிதமான உண்மையும் இல்லை.

அரசாங்கம் யுத்தத்தை விற்றுப் பிழைக்கின்றது. ஆனால், எமது படையினர் அடிப்படை வசதிகளின்றி வளப் பற்றாக்குறையுடன் நெருக்கடியில் வாழ்கின்றனர். இவற்றை நீக்குவதற்கும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்குமான திட்டத்தை நான் முன்வைத்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அவ்வாறானவர்கள் இன்று கட்அவுட் அரசியல் செய்கின்றனர்.

பத்து பர்ச்சஸ் நிலம் இல்லாதவர்களுக்கு 300 ஏக்கர்களுக்கும் மேல் நிலங்கள், வளங்கள், நிறுவனங்கள் சொந்தமாகியுள்ளன. இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தன?

எதிர்வரும் வாரங்களில் பல விடயங்கள் தொடர்பான உண்மைகளை நீங்களும் தெரிந்து கொள்வதற்கு ஒலிநாடாக்களை வெளியிடவுள்ளேன்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் யுத்தத்தில் பாவிக்கப்பட்டன. புதிதாக கொள்வனவு செய்யப்படவில்லை. தோட்டாக்கள் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்டன.

ஆனால், கனரக ஆயுதங்கள் இலவசமாகவே ஆயுதக் கம்பனிகளால் வழங்கப்பட்டன என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாதுகாப்பு செயலரின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிதலைவர் சுட்டு கொல்லப்பட்டனர்- முன்னைநாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக!


பாதுகாப்பு செயலரின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிகளின் தலைவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் என முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய ஜனாதிபதி பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் சகேதரரான பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே களமுனையில் இருந்த படை படை தளபதிகள் சரணடைந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றனர்.

சீனாவுக்கான பயணத்தினை தான் மேற்கொண்டிருந்த சமயம் படை தளபதிகளுக்கான உத்தரவை பாதுகாப்பு செயலர் தானே நேரடியாக மேற்கொண்டு 58வது படையணியின் தளபதி சர்வேந்திர சில்வாவுக்கு சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டு கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சரத் பொன்சேகா இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் வெள்ளைக்கொடியை ஏந்திவந்த புலிகளின் தளபதிகளை சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இது குறித்து இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவிக்கையில்இ இவ்வாறான செய்திகள் நிறையவே சரத் பொன்சேகாவால் வெளியிடப்படலாம் ஆகவே இவற்றுக்கு எல்லாம் நான் கருத்துகூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் சரத் பொன்சேகாவின் கூற்றை மறுத்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா


எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் தாருங்கள் - ஜெனரல் சரத் பொன்சேகா


தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.

“நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோருடனான கூட்டம் இன்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா,

"நான் முன்னர் வகித்த பதவிகளில் அதற்குரிய சலுகைகள் கிடைத்தன. அவை போதாது என்பதைக் காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட வரவில்லை. எனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்கவில்லை. நான் இறுதியாக அரசாங்க பதவி வகித்த காலத்தில் பாதுகாப்புக்கென 25 வாகனங்களுடன் 600 படையினர் வழங்கப்பட்டிருந்தார்கள்.

எனக்கென தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்தச் சலுகைகள் அனைத்தும் எனது தராதரத்தில் இருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.

எனக்கு அந்தப் பதவியில் இருந்து அனைத்து சலுகைகளையும் அனுபவித்திருக்க முடியும். அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்குக் கூட ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் வந்து கதைத்தார். ஆனால், இவை எல்லாவற்றையும் விடுத்து மக்கள் நலனுக்காக களமிறங்கத் தீர்மானித்தேன்.

நாட்டில் ஜனநாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.

வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியானதொரு தீர்வு எட்டப்பட வேண்டும். நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் வாழ்க்கைச் செலவுகளை குறைத்து பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உழைப்பேன்.

பெண்களின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. யுத்தத்தில் கூட பெண்களுக்கு மிக முக்கியமானதொரு பங்கு உண்டு. இலங்கையில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்டோர் பெண்களே இருக்கின்றனர். எனக்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்யும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலைமையும் நாட்டின் தற்போதைய சூழலும் கவலைக்குரியவை -பொன்சேகா தெரிவிப்பு;


உயிர்த் தியாகங்களைச் செய்து, பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கையில் அது மிகவும் கவலையளிக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்ததன் பின்னரும் எனக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. அதனை செவ்வனே நிறைவேற்றுவேன். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனõதிபதிப் பதவியில் அமர்வது, சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அல்ல. 30 வருட காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இந்நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அதனை மக்களிடம் ஒப்படைப்பதே எனது பணியாகும் என்றும் அவர் கூறினார்

ஜே.வி.பி. கட்சிப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் கொழும்பு07, புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன், விஜித ஹேரத் உள்ளிட்ட எம்.பி.க்களும் மாகாண சபை, பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்களும் மற்றும் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் நலனுக்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்ற கட்சியாக நான் ஜே.வி.பி.யை காண்கின்றேன். அந்த வகையில், எனது இராணுவ சேவை இன்னும் ஒன்றரை வருடத்திற்கு நீடித்திருக்கக் கூடியதாக இருந்தாலும், சீருடையைக் கழற்றி வைத்து விட்டு மக்களுக்குச் சேவை செய்ய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எந்தவொரு இராணுவத் தளபதியும் தான் ஓய்வுபெற்றதன் பின்னர் அவருக்கு வழங்கப்படுகின்ற உடைமைகளை அரசாங்கம் இலஞ்மாகவே கருதுகின்றது. எனக்கு அமைச்சின் செயலாளர் பதவியும், அமைச்சுப் பதவிகளும் தேடிவந்தன. ஆனாலும், அவற்றை நான் ஏற்கவில்லை.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னரும் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எண்ணியபோதிலும், அது நடைபெறவில்லை. ஆனால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற சுமைகள் ஆகியவை மாத்திரம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலைமைகளை மாற்றியமைப்பதற்கும், நல்லாட்சி ஒன்றை மலரச்செய்வதற்கும், அதேபோல் அரச சேவை, பொலிஸ் சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகளில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்படுவதற்கும், ஊழல் மோசடிகள் மற்றும் இலஞ்சம் ஆகியவற்றை இல்லாது செய்வதற்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

எனது இந்தப் பயணத்தில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு எனக்கு இருக்கின்றது. அதன்பஐ, நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி என்ற உத்தியோகபூர்வ பதவி அதிகாரம் இருக்கவேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, வெறுமனே சுகபோகங்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டு, மக்கள் சேவைகளிலிருந்து விலகியிருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கென்று இருக்கின்ற பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வில்லியம் கோபல்லாவைப் போல் இருப்பதற்கு என்னால் முடியாது.

மக்களுக்குப் பதிலளிக்கக் கூடிய பாராளுமன்றத்தை நிறுவி, அதனூடாக நல்லாட்சியை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். இன்று குடும்ப அதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதி சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாடு மீட்டெடுக்கப்பட்டது குடும்ப அதிகாரத்திடம் கையளிப்பதற்காக அல்ல. இந்நாட்டில் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்தே தீருவேன்.

பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்டமைக்குச் சொந்தக்காரன் யார் என்பதற்கு இப்போது விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இது தற்போது தேவையற்ற விடயமா கும். அதனை விடுத்து, சகோதரக் கம்பனி இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றமையானது, கவலைக்குரியதாகும். 15 வருடங்கள் நாட்டிலிருந்து விலகியிருந்த ஒருவர் இதற்குத் தகுதியற்றவராவார்.

எனக்கென்று ஒரு கனவு இருக்கின்றது. அதனை நனவாக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கின்றது. எமது எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்ததொரு வளம் நிறைந்த நாட்டை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கின்ற நல்லாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்தக் கனவாகும்.

அரசாங்கமும், அதன் நிர்வாகிகளும் எனக்கு எதிராக எத்தகைய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சட்டத்தை மதிக்கின்ற 95 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது, பொது மக்களும் எமது பயணத்தில் இணைந்துள்ளனர். எனவே, உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கான எமது இந்தப் பயணத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் கட்சிகளும், அதன் உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு வழங்கும் முகமாக எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அக்கறை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளது: சரத் பொன்சேகா


யுத்த வெற்றியின் பின்னர் இராணுவ வீரர்களின் நலன்கள் குறித்தோ இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார நிலைமை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

தலைநகர் கொழும்பிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள வெலிசறையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட சம்மேளனக்கூட்டத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா தாம் அரசியலுக்கு பிரவேசிக்க காரணமான விடயங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இம்முறை ஜனாதிபதி தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாக கருத முடியும் எனக்குறிப்பிட்டார்.

குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கும் மக்கள் கருத்துக் கணிப்பாக இந்த தேர்தல் அமையும் என அவர் குறிப்பிட்டார் .

இந்த கூட்டத்தில் உரையாற்றுவோர் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏஸ்.பி திசாநாயக்கவின் பெயர் உள்ளடக்கடப்பட்டிருந்தபோதிலும் அவர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மாநாட்டின் போது அரசாங்க ஊடகங்களை சேர்ந்த 7 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு ஐக்கிய தேசியக்கட்சியே காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச தொலைக்காட்சி சேவைகளான ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றை சேர்ந்த ஊடகவியலாளர்களே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கவாதிகள் சந்திப்பு


இலங்கையில், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்காகப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்யும் வகையிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பொன்று நேற்றுக் கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜெனரல் சரத் பொன்சேக்கா, யுத்த வெற்றியைக் கொண்டுவந்தது யார் என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் கூறினார்.

யுத்த வெற்றிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியதுடன், தமது 40 வருட அனுபவத்தையும் அதற்காகப் பயன்படுத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்தார்.

ஜனநாயகம் இல்லாமல் போவதற்கும், அனைத்தையும் ஒடுக்குவதற்கும், தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கும் ஏதுவாக, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே அடிப்படையாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்குத் தாம் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, யுத்தத்தை வெற்றிகொண்டு ஏழு மாதங்கள் கடந்தும் அதுதொடர்பாக இன்னும் பதாகைகளை நிறுவுகின்றனர் எனக் கூறினார்.

எனினும் அதற்கப்பால் நாட்டிற்குத் தேவையான சமாதானம், சட்டம் மற்றும் ஒழுங்கு, அபிவிருத்தி என்பவற்றைக் கொண்டுவர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள தமது செயற்பாடுகளின் மூலம், எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பை உறுதிசெய்து, சிறந்த கல்வியை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் அங்கு கருத்துத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் பொன்சேகா இந்தியா பயணம்


எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு இந்தியாவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அவர் இன்று நாடு திரும்பவுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட விஜயம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனத்தில் இவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates