யுத்தத்தைப் போன்று நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் : ஜெனரல் சரத்
யுத்தத்தில் வெற்றிகொண்டது போல நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"நிறைவேற்று அதிகாரத்தால் துஷ்பிரயோகம் தான் நடக்கிறது. அதனை இல்லாதொழித்து ஜனநாயத்தை நிலைநாட்டுவதையே எனது முதற்கடமையாக கொண்டுள்ளேன்.
என்னுடன் இணைந்துள்ளவர்கள் ஊழல்களுடன் தொடர்புபட்டவர்கள் அல்லர். தூய்மையான கரங்களும் நல்ல எண்ணங்களும் இருந்தால் நாட்டை ஊழல்களிலிருந்து நிச்சயம் பாதுகாக்கலாம். நடைமுறை அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாது.
ஆட்சி மாற்றம் ஒன்று இப்போது இடம்பெறாவிட்டால், இனி எக்காலத்திலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
0 Response to "யுத்தத்தைப் போன்று நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் : ஜெனரல் சரத்"
แสดงความคิดเห็น