கெக்கிராவயில் மினி சூறாவளி : 40 வீடுகள் பலத்த சேதம்

அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சூறாவளியால் பல வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொரகொல்லாவ, ஹோராப்பொல பகுதிகளிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 40 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சேத விபரங்களைக் கண்டறிய கிராம அதிகாரிகள், மற்றும் சமூக சேவைகள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சூறாவளியால் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் வீழ்ந்துள்ளதால், மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.







0 Response to "கெக்கிராவயில் மினி சூறாவளி : 40 வீடுகள் பலத்த சேதம்"
แสดงความคิดเห็น