jkr

நிவாரண பொருட்கள் அரசிடம் ஒப்படைப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த வணங்கா மண் நிவாரணப் பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது.

சங்கத்தின் செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்கிரமவினால் கையளிக்கப்பட்ட இந்நிவாரணப் பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பெற்றுக்கொண்டார். இந்நிவாரணப் பொருட்கள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வவுனியாவைச் சென்றடையும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நிவாரண பொருட்கள் அரசிடம் ஒப்படைப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates