jkr

புத்தளம் நகரத்தில் மினி சூறாவளி

புத்தளம் நகரத்தில் இன்று பிற்பகல் வேளையில் வீசிய மினி சூறாவளியால் 600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,15 பேர் வரை காயமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 அளவில் பெய்த கடும் மழையினையடுத்து திடீரென ஏற்பட் காற்றினால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.பாரிய மரங்கள் பல வீதிகளிலும்.வீடுகளிலும் சரிந்து வீழ்ந்தன.முச்சக்கர வண்டிகள்,மோட்டார் கைச்சிள்கள்,மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன தேத்துக்குள்ளாகியுள்ளன.

புத்தளம் கடற்கரை வீதி,மஸ்ஜித் வீதி.மரைக்கார்; வீதி,வான் வீதி,நுர் நகர் பகுதி,சவிவபுரம் போன்ற பகுதிகளிலேயே இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.நபீல் தெரிவித்தார்.

இதே வேளை தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலையினையடுத்து கால் நடை வளத்துறை பிரதி அமைச்சர் கே.எ.பாயிஸ்,மீ;ள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.

அதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கொழும்பிலிருந்து உடனடியாக புத்தளத்துக்கு வருகைத்தந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன்,சேத விபரங்கள் குறித்து விபரங்களை செகரிக்குமாறு புத்;தளம் மாவட்ட செயலாளார்,பிரதேச செயலாளார்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

ஆமைச்சருடன்,புத்தளம நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி,பிரதி தலைவர் அலிகான்,உறுப்பினர் முஹ்ஸி,கல்பிட் பிரதேச சபை உறுப்பினர் மின்ஹாஸ் உட்பட பலரும் சமூகமளித்திருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புத்தளம் நகரத்தில் மினி சூறாவளி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates