உறவுகளை பறிகொடுத்து வாடும் மக்கள் |
இந்தோனேஷிய பூகம்பம்: உயிர் சேத எண்ணிக்கை உயர்வு
இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் புதன்கிழமை நடந்த பூகம்பத்தால் இதுவரை 520 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் அளவிலான இந்த பூகம்பத்தால், படாங் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
அத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனனர். வீதிகள் மற்றும் ஏனைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், மீட்புப் பணிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, படாங்கில் உயிர் தப்பிய பலர் வெறுங்கைகளால் இடிபாடுகளைத் தோண்டி புதையுண்ட உறவினர்களையும், நண்பர்களையும் தேடிவருகிறார்கள்.
அத்துடன் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
படாங்குக்கு தென்கிழக்கே இருநூறு கிலோமீட்டர் தூரத்தில், சிறிய அளவில் வியாழனன்று மற்றுமொரு பூகம்பமும் தாக்கியுள்ளது.
சமோஆ சுனாமி: மீட்புப் பணிகள் ஆரம்பம்
இத்தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதில் 140 பேர் உயிரிழந்திருப்பதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுவாசல்களை இழந்துள்ளனர். மருத்துவப் பணியாளர்களையும் நிர்வாரணப் பொருட்களையும் சுமந்துவந்த இராணுவ விமானங்கள் இத்தீவுகளை வந்து அடைந்துள்ளன.
நிவாரணப் பணிகள் ஆரம்பித்துள்ளன என்றாலும், கூடுதலான உதவிகள் தேவைப்படுகின்றன.
சமோஆ தீவில் பழுதான சாலைகளை பழுது பார்ப்பதற்கு மட்டுமே 7 கோடி டாலர்களுக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என்றும், நாட்டு மக்களுக்கு சர்வதேச நிதி உதவிகள் தேவைப்படுவதாகவும், சமோஆவின் பிரதமர் துயிலேபா சைலேலே கூறியுள்ளார்.
இரான் அணுசக்தி சர்ச்சை: அமெரிக்க - இரான் அதிகாரிகளிடையே சந்திப்பு
அமெரிக்க - இரான் அதிகாரிகளிடையே சந்திப்பு |
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 5 உறுப்பு நாடுகளும், ஜெர்மனியும், இரானின் யுரேனிய செறிவாக்கல் திட்டம் குறித்து அந்த நாட்டுடன் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜெனிவாவில், அரசுத்துறையின் துணைச்செயலர் வில்லியம் பர்ண்ஸ் அவர்களுக்கும், சாயிட் ஜலிலிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
6 நாடுகள் பேச்சுவார்த்தை ஆக்டோபர் மாத இறுதிக்கு முன்னததாக ஆரம்பிக்கும் என்று இரானிய தொலைக்காட்சி கூறியுள்ளது.
எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மனித எலும்புக்கூடு
கிடைத்த எலும்புக்கூட்டின் அடிப்படையில் அர்தியின் உருவம் |
1994ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டிருந்த 1.2 மீட்டர் உயரம் கொண்ட இந்த எலும்புக்கூடுதான் மனித பரிணாம வளர்ச்சியுடைய முதற்படியை கோடி காட்டுவதில் இதுவரையில் கிடைத்தவற்றிலேயே அதிகம் சிறப்பு வாய்ந்தது என்று சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
இந்த எலும்புக்கூட்டுக்கு அர்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
லூசி என்று பெயரிடப்பட்ட ஓர் எலும்புக்கூடுதான், இதுவரை கிடைத்த ஆகப் பழமையான மனித மூதாதைய எச்சம் என்று கருதப்பட்டுவந்தது. ஆனால் அதனை விட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையானது அர்தி என்பது தற்போதைய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
0 Response to " "
แสดงความคิดเห็น