ஏ-9 பாதையூடாக அம்புலன்ஸ் வண்டி பயணம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்!
ஏ-9 தரைப்பாதையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு நோயாளர்களை அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் (28) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏ-9 தரைப்பாதை ஊடாக வரையறைக்கு உட்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்து உட்பட ஏனைய சில போக்குவரத்து நடவடிக்கைககள் இடம்பெற்று வருகின்ற போதிலும் தற்போது அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் நோயாளர்களை யாழ் குடாநாட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பெரு முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் ஸ்ரீ லங்கா புனித ஜோன் அம்புலன்ஸ் சேவைக்குரிய அம்புலன்ஸ் வண்டி மூலம் இன்றைய தினம் இ. சீவரத்தினம் எனும் நோயாளர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
0 Response to "ஏ-9 பாதையூடாக அம்புலன்ஸ் வண்டி பயணம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்!"
แสดงความคิดเห็น