பிலிப்பைன்ஸை நோக்கி நகரும்
இது ஒரு வார காலப் பகுதியில் பிலிப்பைன்ஸை தாக்கும் இரண்டாவது மிகப் பெரிய புயலாகும்."பர்மா' புயலானது தலைநகர் மணிலாவின் வடக்கேயுள்ள லுஸான் தீவை தாக்கவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிலிப்பைன்ஸைத் தாக்கிய "கெட்ஸானா' புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் குறைந்தது 300 பேர் பலியானதுடன், வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸில் 100 பேர் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ருளோரியோ அர்ரோயோ தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, புதிய "பர்மா' புயல் தாக்கவுள்ளதால் கடற்கரையை அண்டியுள்ள பிரதேசங்களில் வாழ்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.
மணிக்கு 230 கிலோ மீற்றர் வேகத்தில் வீசவுள்ள "பர்மா' புயல், 2006 ஆம் ஆண்டுக்கு பின் பிலிப்பைன்ஸைத் தாக்கும் மிகப் பலமான புயலாக விளங்குவதாக பிலிப்பைன்ஸின் காலநிலை பணிமனை தெரிவிக்கிறது.
0 Response to "பிலிப்பைன்ஸை நோக்கி நகரும்"
แสดงความคิดเห็น