மீனவர் மீதான தாக்குதல்,
தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறு வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியையும் கையளிப்பதற்காக திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமரை நேற்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டி.ஆர்.பாலு பிரதமரிடம் கடிதத்தை கையளித்த போது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளõர் என்று தி.மு.க. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு குழுவொன்றை அனுப்புவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும், பிரதமர் மன்மோஹன் சிங், பாலுவிடம் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்த பாலு, முதலமைச்சர் கருணாநிதியின் கடிதத்தையும் முப்பெரும் விழா தீர்மானத்தின் பிரதியையும் அவர்களிடம் கையளித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் தொடர்பில் மத்திய அரசாங்கம் விரைந்து செயற்படும் என்று சோனியா காந்தி, பாலுவிடம் உறுதியளித்தார். சிதம்பரம் கருத்து
இதேவேளை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய் யப்படுவதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். இலங்கை கடற் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய மீனவர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல் போன்ற சில நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அவர், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
0 Response to "மீனவர் மீதான தாக்குதல்,"
แสดงความคิดเห็น