அரசு - சரத் இடையில் முரண்பாடு எதுவுமில்லை : உதய நாணயக்கார

முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமை அதிகாரியுமான சரத் பொன்சேகாவுக்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது அடிப்படையற்ற தவறான முறையில் வழிநடத்தக்கூடிய செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்தும் சரத் பொன்சேகா, இராணுவத்தின் உயர்பதவியைத் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
படையினர் பெற்றுக்கொண்ட வெற்றியையும் பெருமையையும் மழுங்கடிக்கும் வகையில், இந்தச் செய்தி புனையப்பட்டுள்ளதாகவும் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நேற்று கொழும்பில் இராணுவத்தினரின் வெற்றியை குறித்த நூல் வெளியீடு தொடர்பான நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பங்கேற்ற போதும் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா பங்கேற்கவில்லை.
இது அவருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகலை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, படையினரின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு, அவர்களை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்குமாறு ஜனாதிபதியைக் கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.







0 Response to "அரசு - சரத் இடையில் முரண்பாடு எதுவுமில்லை : உதய நாணயக்கார"
แสดงความคิดเห็น