jkr

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி; பணம், நகை கொள்ளை!


வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் நேற்றிரவு ஆயுத முனையில் தனி நபர் ஒருவர் பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். அவரைத் துரத்திப்பிடித்த ஊரவர்களை நோக்கி இந்நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்; மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளானார்.

ராமமூர்த்தி குலேந்திரன்(36 வயது) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமானார். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.

மேற்படி நபர் ஒரு லட்ச ரூபாவுக்கும் மேல் பணத்தையும் 26 பவுண் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இச்சம்பவத்தையடுத்து இப்பிரதேசத்தில் பதஷ்டநிலை தோன்றியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். வவுனியா மாவட்ட நீதிபதி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி; பணம், நகை கொள்ளை!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates