jkr

ஜீ ரீ வி க்கு மூடு விழா ?


புலம் பெயர்ந்த மக்களிடம் தொலைக்காட்சி எனும் பேரில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கடை விரித்துள்ளன, புலிகளின் பாசிஷ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் உத்தியை வகுத்து தரிசனம், தென்றல் எனும் வரிசையில் இரண்டு வருட காலமாக ஜீரிவி தொலைக்காட்சி தனது வியாபாரத்தை நடத்தி வந்தது, இதற்கான செலவினங்களை விடுதலைப் புலிகளே பொறுப்பேற்று இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன, இதனால் இலவசமாக புலிகளின் செயற்பாடுகளை அரங்கேற்ற ஜீரீவி நிர்வாகத்தால் முடிந்தது.

இருப்பினும் இதனை வியாபாரமாக மேற்கொண்டால் பல டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதில் முனைப்புக் கொண்ட நிர்வாகம் "தரணியெங்கும் தமிழொழி பரவிட" எனும் கோஷத்துடன் சந்தாதாரர்களைத் தேடத் தொடங்கியது, இத் தொலைக்காட்சியில் சந்தாவினைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஆட்டம் காணத் தொடங்கியது, இக்காலத்தில் ஸ்ரீலங்கா படையினர் விடுதலைப் புலிகளுக்கான சண்டையைத் தீவிரப்படுத்தி இருந்தனர், இதனால் சந்தா தேடும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன் வன்னி யுத்தத்தில் சிக்குண்ட மக்களை விளம்பரக் காட்சியாக்கி புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களின் ஆதரவை கண்ணீர்த் துளிகள் எனும் தொலைக்காட்சி நிகழ்வு மூலம் திரட்டத் தொடங்கினர், இதனால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஜீ ரீவியைப் பார்க்க உந்தப்பட்டனர், இதனை சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ஜீ ரீவி நிர்வாகம் மீண்டும் சந்தாதாரர்களையும், விளம்பரதாரர்களையும் தேட முற்பட்டனர், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கத் தவறியதால் மீண்டும் இலவச சேவையை நடாத்த முனைந்தனர்.

கேபி பத்மநாதனின் கைதுக்குப் பின்னர் ஜீ ரீவி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளினால் கிடைத்து வந்த நிதி முடக்கப்பட்டது, இதனால் தொலைக்காட்சியைத் தொடர்ந்து நடாத்த முடியாத நிலையில் இருக்கும் ஜீ ரீவி நிர்வாகம் இன்று தனது வழமையான நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு "வடம் பிடிப்போம்" எனும் முழு நாள் நிகழ்ச்சியின் மூலம் இனிமேல் இலவசமாக தொலைக்காட்சியை நடத்த இருப்பதாகவும் அதற்கான தொடர் ஆதரவைத் தருமாறு நேயர்களிடம் மூவர் சேர்ந்து இரத்தல் செய்கின்றார்கள், இதனால் கிடைக்கும் நிதியைக் பெற்றுக் கொண்டு தொலைக்காட்சிக்கு மூடு விழா நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜீ ரீ வி க்கு மூடு விழா ?"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates