குருநாகல் குண்டுவெடிப்பு : சந்தேகத்தில் படைவீரர் ஒருவர் கைது.

குருநாகலில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் நின்று செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் படைவீரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருகிலிருந்த இராணுவ விடுதி ஒன்றில் தமது பதவியை ராஜினாமா செய்த இவர், வேனில் குண்டைப் பொருத்திவிட்டு தலைமறைவாகியிருந்தார் என விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
12 வயது சிறுமி ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் எண்மர் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். வேன் உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் வைத்தே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வேனை சாரதி செலுத்த ஆரம்பித்த வேளை, குண்டு வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஏனையோர் பாடசாலை செல்லும் மாணவர்களை விடுவதற்காக வேன் உரிமையாளர் வீட்டுக்கு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது







0 Response to "குருநாகல் குண்டுவெடிப்பு : சந்தேகத்தில் படைவீரர் ஒருவர் கைது."
แสดงความคิดเห็น