தமிழ் எழுத்தாளர் முன்னணி மீண்டும் ஆரம்பம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி உதவி

யாழ் மாவட்ட இலக்கியக் கர்த்தாக்களுடனான சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது சந்திப்பொன்று நேற்று மாலை 4.00 மணிக்கு அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் தற்கால அரசியல் நிலைமைகள் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு எதிர்காலத் திட்டங்கள் கலை இலக்கியத்துறையின் மேம்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. அத்துடன் யாழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தை மீள செயற்படுத்தும் திட்டத்திற்கு இணங்க தற்காலிக குழுவொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது.
இதின் தலைவராக செங்கை ஆழியான் அவர்களும் செயலாளராக ரமேஸ் அவர்களும் பொருளாளராக சோ. பத்மநாதன் அவர்களும் உறுப்பினர்களாக ஐ. சாந்தன் மற்றும் க. தணிகாசலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் இம்முன்னணியின் செயற்பாடுகளுக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு இலட்சம் ரூபா நிதியையும் வழங்கினார். மேற்படி முன்னணியின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்

0 Response to "தமிழ் எழுத்தாளர் முன்னணி மீண்டும் ஆரம்பம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி உதவி"
แสดงความคิดเห็น