67பேருடன் சென்ற மேலுமொரு சட்டவிரோத படகை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது..
அவுஸ்திரேலியா கடற்படையினர் நேற்று இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 67பேருடன் சென்ற படகுஒன்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் உட்படசட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது இவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் 2007ம் ஆண்டு அவுஸ்திரேலியா குடிவரவு சட்டத்தின் சரத்துக்களை தளர்த்தியதை அடுத்து அந்த நாட்டுக்கு செல்லும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட சட்டவிரோத படகுகள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்துள்ளன இதேவேளை இந்தோனேசியவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 8இலங்கையர்கள் நேற்று இலங்கை திரும்பியுள்ளனர் இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்களாவர். கடந்த மேமாதம் 14ம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் பணிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகம் மேற்கொண்டிருந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் விடுவிக்கப்பட்டார்களா? அல்லது விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என்ற விடயங்கள் இன்னும் தெரிய வரவில்லை.
0 Response to "67பேருடன் சென்ற மேலுமொரு சட்டவிரோத படகை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.."
แสดงความคิดเห็น