சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரை சட்டத்திருத்தங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியும் -கெஹெலிய ரம்புக்வெல்ல!
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களை புதிய சட்டத் திருத்தங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புதிய சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பல வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை மூடிவிட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடி நடவடிக்கைகளை 100வீதம் குறைக்கமுடியாதபோதிலும் அநேகமான மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவிததுள்ளார். புதிய சட்டமூலத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோர் பூரண நன்மை அடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் மட்டும் சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து வேலை வாய்ப்பு பெற்றுச் சென்ற 15000பேர் தங்கியிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இவ்வாறு சட்டவிரோதமாக செல்வோரை கட்டுப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் வரிவருமானத்தையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரை சட்டத்திருத்தங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியும் -கெஹெலிய ரம்புக்வெல்ல!"
แสดงความคิดเห็น