jkr

அவுஸ்திரேலியாவிலிருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்-சேனக வல்கம்பாய


- அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒன்பது இலங்கையர்களை நாடுகடத்தவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சேனக வல்கம்பாய தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் சிங்களவர் எனவும் அகதிகள் இல்லையென்றும் வேலைவாய்ப்பினை பெற்று கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் பிரதமர் கெவின் ரூட் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டு அடைக்கலம் கோரியோர் என அவுஸ்திரேலிய செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் நேற்றிரவு கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பேர்த் நகருக்கு அழைத்துவரப்படவிருந்தார்கள்.குறித்த ஒன்பது பேரும் கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தன் பின்னர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் 12 பேர் அடங்கிய குழுவினருடன் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தனர்.எனினும் இவர்களில் இருவர் சுயமாகவே இலங்கைக்கு திரும்பினர்.

இந்தநிலையில் நாடு கடத்தப்படவுள்ள 9 பேரின் உயிருக்கும் இலங்கையில் ஆபத்து எதுவும் ஏற்பட போவதில்லையென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அகதிகள் இல்லையென்றும் வேலைவாய்ப்பினை பெற்று கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அடைக்கலம் கோரியோரின் சட்டத்தரணியான இயன் ரின்டவுல் தகவல் தெரிவிக்கையில் தாம் நாடு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென ஒன்பது பேரில் உள்ளடங்கியுள்ள சரத் தென்னக்கோன் என்பவர் அச்சம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த 9 பேரும் தாம் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்த போதும் அது நிராகரிக்கப்பட்டது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அவுஸ்திரேலியாவிலிருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்-சேனக வல்கம்பாய"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates