வேம்படியில் இலவச பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம் : கல்வி அமைச்சு தீர்மானம்
பிரதி கல்வி அமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று காணப்படுகின்ற அமைதியான சூழல் காரணமாக ஏறக்குறைய 28 ஆண்டுகளின் பின் ஏ-9 ஊடாக மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாகப் பாரிய போக்குவரத்துச் செலவுடன் யாழ்ப்பாணத்துக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாட்டில் சுமுகநிலை காணப்படுவதையடுத்து, குறைந்த செலவில் ஏ-9 வீதி வழியாகப் பாடப் புத்தகங்கள் குடா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
0 Response to "வேம்படியில் இலவச பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம் : கல்வி அமைச்சு தீர்மானம்"
แสดงความคิดเห็น