jkr

பூண்டுலோயாவில் கோஷ்டி மோதல்


பூண்டுலோயாவில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது இரண்டு வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வாகனங்களுக்குத் தீவைத்த சம்பவம் குறித்து நான்கு சந்தேகநபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு சந்தேகநபர்களும் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக மேலும் சில சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு தரப்பினரிடையேயான மோதல் சம்பவத்தில் காயமடைந்த ஐவர் கொத்மலை மற்றும் கம்பளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறினர்.
தனிப்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணமெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பூண்டுலோயாவில் கோஷ்டி மோதல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates