பிரிட்டனில் புகலிடம் மறுக்கப்படும் இலங்கையர் தொடர்பாக மறு பரிசீலனை.

பிரித்தானியாவில் புகலிடம் கிடைக்காதவர்களை நாடுகடத்துவது தொடர்பாகப் பரிசீலிக்கும்போது, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் ஆராயுமாறு பிரித்தானிய நீதிமன்றமொன்று அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அலுவலகம், மன்செஸ்டர் மேல் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்தே, நீதிமன்றம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் பிரஜையொருவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை அடுத்தே மன்செஸ்டர் மேல்நீதிமன்றம் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியதாக பீ.பீ.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மோதல்கள் முடிவடைந்ததன் பின்னர், தமது நாட்டின் தற்போதைய கொள்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அலுவலகம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளதாக பீ.பீ.சீ. உலக சேவை கூறுகின்றது..
மறுபரிசீலனை முடிவடையும் வரை பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்படுகின்றவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்களென அந்த அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.







0 Response to "பிரிட்டனில் புகலிடம் மறுக்கப்படும் இலங்கையர் தொடர்பாக மறு பரிசீலனை."
แสดงความคิดเห็น