jkr

தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது!

நீண்ட காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவியாளர் நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு 436 ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினர்.

வட மாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரிய உதவியாளர்களின் கடமை மற்றும் எதிர்காலம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெறவுள்ள அனைவரினதும் எதிர்காலம் அவர்கள் மேற்கொள்ளும் கல்வி நடவடிக்கைகள்தான் தங்கியுள்ளது என்பதைக் கவனத்திற்கொண்டு கடமைகளை சரிவரச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆரம்ப நடவடிக்கையாக இந்தத் தற்காலிக பதவி நியமனத்தை தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கும்போதும் ஆசிரிய உதவியாளர்களின் நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்துவதற்கும் சரியான அரசியல் தலைமையொன்று அவசியம் என்பதுடன் அத்தகைய அரசியல் தலைமையை தேர்வு செய்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்தகால அனுபவங்களை மீண்டும் சீர்தூக்கிப் பார்த்து அனைவரினதும் எதிர்காலம் சிறப்பாக அமைவதை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தலைமையை ஆசிரிய உதவியாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்கான வாய்ப்பு தற்போது மக்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, பெரும் எண்ணிக்கையானோர் தங்களது வேலைக்கான பதவி நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்வதற்கு இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் தொண்டர் ஆசிரியர்களுக்காக விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து அதனடிப்படையில் இந்த நியமனக் கடிதங்களைப் பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிரிய உதவியாளர்கள் நன்றியுடையவர்களாக இருப்பதுடன் அமைச்சரின் எதிர்காலப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates