புலமைப் பரிசில் பரீட்சை: நலன்புரி நிலையத்தில் இரு மாணவர்களுக்கு 175 புள்ளிகள் (இணைப்பு 2)
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய இரண்டு மாணவர்கள் 175 புள்ளிகளைப் பெற்று தமது மாவட்டத்தி்ல் முதல் நிலையைப் பெற்றுள்ளார்கள்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மசிறி கீர்த்திகன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையைச் சேர்ந்த செலசிறின் சதுர்ஷயா ஆகிய இரண்டு மாணவர்களுமே இவ்வாறு மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்கள்.
இதேவேளை, முகாம்களில் இருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை வெட்டுப்புள்ளி 111 புள்ளிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதி உட்பட, ஏனைய இடங்களில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், புல்மோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் என்பவற்றிலிருந்து 5400 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 Response to "புலமைப் பரிசில் பரீட்சை: நலன்புரி நிலையத்தில் இரு மாணவர்களுக்கு 175 புள்ளிகள் (இணைப்பு 2)"
แสดงความคิดเห็น