மணிப்பூரில் என்கவுண்டரில் 7 பேர் சுட்டுக் கொலை
இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இம்பாலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த்ரோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பகுதியில், நேற்று நள்ளிரவில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது அந்த மர்ம நபர்கள் அஸ்ஸாம் படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதையடுத்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் திருப்பிச் சுட்டதில் ஏழு பேர் இறந்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், ஏகே 47 துப்பாக்ககிள், 9 எம்எம் துப்பாக்கிகள், இரண்டு கிரேனடுகள், துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
பலியானவர்களில் நான்கு பேர் ராணுவ சீருடையில் இருந்தனர். மற்ற மூன்று பேர் சாதாரண உடையில் இருந்தனர்.
ஆனால் இவர்களில் பலர் தீவிரவாதிகள் இல்லை என்றும் வீடுகளுக்குப் போய் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் இவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
..

0 Response to "மணிப்பூரில் என்கவுண்டரில் 7 பேர் சுட்டுக் கொலை"
แสดงความคิดเห็น