jkr

அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி


குவஹாத்ததி: அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தில் நடந்த 3 குண்டுவெடிப்பு ச் சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. நல்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே 2 குண்டுகள் வெடித்தன. 3வது குண்டு கோபால் பஜார் பகுதியில் வெடித்தது. முதல் 2 குண்டுவெடிப்பு நடந்த 5வது நிமிடத்தில் 3வது குண்டு வெடித்தது.

இந்த குண்டுகள் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. கால் மணி நேரத்திற்குள் 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உல்பா தீவிரவாதிகளே இதற்குக் காரணமாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates