jkr

முல்லைத்தீவு,கிளிநொச்சி அரச ஊழியர்கள் அங்கு செல்ல பஸ் சேவை


முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கடமை புரிந்த அரச ஊழியர்கள் அங்கு செல்வதற்கான பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து தற்போது யாழ்ப்பாணத்தில் தமது கடமையாற்றுகின்ற மற்றும் கடமையாற்ற கோரியுள்ள அனைத்து அலுவலகர்களையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கடமையைப் பொறுப்பேற்குமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேற்படி அலுவலகர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் அலுவலகத்திலிருந்து விடுவித்தல் கடிதங்களைப் பெற்று முல்லைத்தீவு அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டங்களுக்குச் செல்லும் அரச ஊழியர்கள் சிங்கள மகாவித்தியாலயத்தில் காலையில் வருகை தருமாறும் வரும் போது தம் அடையளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை, உத்தியோகத்தர் அடையாள அட்டை கொண்டு வரும்படியும், மாலையில் திரும்பி வருவதற்கான பஸ் ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "முல்லைத்தீவு,கிளிநொச்சி அரச ஊழியர்கள் அங்கு செல்ல பஸ் சேவை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates