jkr

தொழிற்சங்கங்கள் இன்று கறுப்புக் கொடி போராட்டம்


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்த தொழிற்சங்கங்கள் முன்னணி மேற்கொண்டு வந்த சட்டப்படி வேலை தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இருந்த போதிலும் அடுத்த கட்ட தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பில் தனித்தனியாக தீர்மானங்களை எடுக்கவுள்ளதோடு இன்று செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக இணைந்த தொழிற்சங்கங்கள் அமைப்பின் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சங்கத்தின் இணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாவது;2009ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்த போதும் எமக்கு கிடைக்கவில்லை.

இதனை எதிர்த்து கடந்த மாதமும் 3 தினங்கள் சட்டப்படி வேலை போரõட்டத்தை முன்னெடுத்தோம் பதில் கிடைக்கவில்லை. எனவே, நவம்பர் மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் சட்டப்படி வேலைப் போராட்டத்தை முன்னெடுத்தோம். இதற்கெதிராக அடக்குமுறை கட்டவீழ்த்து விடப்பட்டதால் 14, 15 ஆம் திகதிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இவ்வாறானதொரு நிலையிலும் எமது கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் பதில் வழங்கவில்லை. அதைவிடுத்து பேச்சுவார்த்தைக்கேனும் அழைக்கப்படவில்லை. எமது தொழிற்சங்கப் போராட்டத்தின் மூலம் பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால், பொது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதற்கு நாம் தயாரில்லை. எனவே, வேலைக்கு இன்று (நேற்று) திங்கட்கிழமை நண்பகல் தொடக்கம் சமுகமளிக்க தீர்மானித்துள்ளோம்.2009 ஜனவரி மாதம் தொடக்கம் சம்பள உயர்வை வழங்கத் தவறினால் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போமென்றும் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

உபாலி ரத்னாயகநீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இணைந்த தொழிற்சங்கம்

சட்டப்படி வேலை போராட்டம் வெற்றியளித்துள்ளது. ஆனால், எமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இன்று செவ்வாய்க்கிழமை கறுப்புக் கொடி போராட்டத்தை அனைத்து நிறுவனங்களின் முன்னிலையிலும் மேற்கொள்ளவுள்ளோம். அத்தோடு எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை அனைத்து நிறுவனங்களின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தவுள்ளோம். அதேவேளை, எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் அனைத்தும் சுயாதீனமாக தீர்மானங்களை மேற்கொள்வதோடு இறுதியாக அனைவரும் இணைந்து சுயாதீன தீர்மானங்களை ஆராய்ந்து பொதுத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தொழிற்சங்கங்கள் இன்று கறுப்புக் கொடி போராட்டம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates