கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப் பந்தாட்டத் திடல் மின்னொளி திறப்பு விழா
யாழ் குடாநாட்டில் மின்னொளியில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஆசை வெகு நீண்ட நாட்களாக தன்னிடம் இருந்து வந்ததாகவும் அந்த ஆசை இன்று நிறைவேறுவதையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தற்போது அமுலிலிருக்கும் ஊரடங்கு சட்டத்தை வெகு விரைவில் முழுமையாக நீக்குவதற்கு தான் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (31) இரவு கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் மின்னொளி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் திரு. அ. அகிலதாஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் யுத்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு வருகின்ற எமது மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்ததுடன் எம்மக்கள் முகங்கொடுத்து வருகின்ற அனைத்துத் தடைகளையும் வெகுவிரைவில் நீக்கி அம்மக்களுக்கு ஒளிமயமான தொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் முகமாக தான் முன்னெடுத்து வரும் செயற்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேற்படி விழாவின் போது நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் ஆண்கள் பிரிவில் கொக்குவில் சனசமூக நிலைய அணியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கான கேடயங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்.

0 Response to "கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப் பந்தாட்டத் திடல் மின்னொளி திறப்பு விழா"
แสดงความคิดเห็น