சட்டவிரோத ஆவணங்கள் வைத்திருந்த இருவர் கைது.
சட்ட விரோதமாக ஏனையயோரின் ஆவணங்களை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் மோதரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதர பொலிஸ் பிரிவின் விஷேட குழுவினரால் ஹிப்பாவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே 21 கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டதுடன் இந்த சந்;தர்ப்பத்தில் விட்டிலிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் மற்றுமமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவர்களின் ஒருவரின் அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து 68 பிறப்பு சான்றிதழ் பத்திரங்களும் 8 கல்வி சான்றிதழ்களும் ஏழு வியாபார பதிவு சான்றிதல்களும்; 67 கடவுச்சீட்டுக்களின் பிரதிகளும் 10; மரண சான்றிதழ்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கைகளால் வரையப்பட்ட தலைநகரின் மாதிரி வரைபடம் ஒன்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் சிலவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இதேவேளை கண்டி நித்தவெல பிரதேசத்தில் நேற்றுமாலை போலியான ஆவனங்களையும் அரச அதிகரிகளின் போலி றப்பர் முத்திரைகளையும் கைப்பற்றியுள்ள கண்டி பொலிஸார் இந்;த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரையும் கைதுச்செய்துள்ளனர்.
0 Response to "சட்டவிரோத ஆவணங்கள் வைத்திருந்த இருவர் கைது."
แสดงความคิดเห็น