அரியாலை கிழக்கு ஞான வைரவர் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு ஞான வைரவர் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேக வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
இன்று காலை நடைபெற்ற அரியாலை கிழக்கு ஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நல்லை ஆதின குரு முதல்வர் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆலயத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆலய நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் ஏற்கனவே ஆலயத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கு பணிகள் குறித்து நனைவு கூர்ந்ததுடன் ஆலயத்தின் பிரதம குரு அமைச்சருக்கு ஆசிகள் வழங்கிப் பாராட்டு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அம்பலம் ரவீந்திரன் ஆலய நிர்வாகத்தின் தலைவர்கள் மற்றும் அப்பகுதிப் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
0 Response to "அரியாலை கிழக்கு ஞான வைரவர் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்."
แสดงความคิดเห็น