மும்பையில் சத்ய சாய் பாபா
சத்ய் சாய் பாபா மும்பை வந்தார். 2000த்திற்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து மும்பை வந்த அவரை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 31ம் தேதி காலை 8 மணி அளவில் புனேயில் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பாபா பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின் மும்பைக்குப் பயணமானார்.மும்பையில் தாமரை தீபம் இல்லத்தில் அவர் தங்குகிறார். 31ம் தேதி மாலை 4 மணிக்கு பம்பாய் கண்காட்சி மையத்தில் பஜனையும் சத்ய சாய் பாபா தரிசனமும் இடம் பெற்றது.
ஞாயிற்றுக் கிழமை அவர் மகாராஷ்டிர முதல்வரின் இல்லத்துக்குச் செல்கிறார். உலக ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் முன்னாள் தலைவர் இந்துலால்ஷா இல்லத்துக்கும் சாய் பாபா செல்கிறார். நவம்பர் 1ம் தேதி மும்பை ஒர்லியில் உள்ள காந்தி மைதானத்தில் காலை 10 மணிக்கு பஜனையும் தரிசனமும் நடைபெறும். மும்பை ஒர்லி கடல் பாலத்தின் வழியாகவும் பயணம் செய்ய சாய் பாபா திட்டமிட்டுள்ளார்.அவர் அவ்வாறு பாலத்தைக் கடந்து செல்லும்போது மும்பை பால் விகாஸ் குழந்தைகள் வண்ண பலூன்களைப் பறக்க விடுவர்.
30ம் தேதி: புனேயில் காலை 11:05 மணிக்கு சத்ய சாய் பாபா பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அவர் தரிசன மேடைக்கு வந்தபோது பர்த்தி சிறுவர்கள், பஜனை பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். பின்னர் பால விகாஸ் சிறுவர்கள் பஜனைப் பாடல்களைப் பாட அதை சத்ய சாய் பாபா ரசித்துக் கேட்டார். 11:45 மணிக்கு ஆராத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மாலை 06:15 மணிக்கு 3 சிறுவ, சிறுமியர் சாய் பாபா முன்னிலையில் பக்தி பாடல்களைப் பாடினர். அதை ரசித்த சாய் பாபா, மேலும் மேலும் பாட்ல்களைப் பாடுமாறு அவர்களை உற்சாகப் படுத்தினார். அந்த 3 பேரும் சாய் பாபா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அவர்களுக்கு சாய் பாபா நினைவுப்பரிசுகளை வழங்கினார்
29ம் தேதி: புனே அருகே உள்ள ஹட்ஸியில் ஸ்ரீ சத்ய சாய் பாண்டுரங்கா ஷேத்திரத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கணேசப் பெருமான், விட்டாலா ரகுமாய் மற்றும் சிர்டி சாய் பாபா விக்ரகங்களை சத்ய சாய் பாபா பிரதிஷ்டை செய்து வைத்தார். அதிகாலையிலிருந்தே சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர் வருவதற்கு சற்று முன்னதாக கணேசப் பெருமான் மற்றும் விட்டாலா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
28ம் தேதி: புனே அருகே உள்ள ஹட்ஸிக்கு சாய் பாபா சென்றார். புனேயில் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் காத்திருந்து வரவேற்றனர். காலை 9:40 மணிக்கு அவர் விமானம் புனே விமான நிலையத்திற்கு வந்தது.அவரை முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில், மகாராஷ்டிர முதல்வர் அசோக சவ்ஹான் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து சிவாஜிராவ் ஜாதவ் இல்லத்துக்கு சென்றார். அவர் அனுமான் சிலையைத் திறந்து வைத்தபின் பகல் 11:30 மணிக்கு ஹட்ஸியில் ஸ்ரீ சத்ய சாய் பாண்டுரங்கா ஷேத்திரத்தில் அமைந்துள்ள விட்டலா ரகுமாய் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாலை நிகழ்ச்சிகள் பஜனையுடன் துவங்கின. மாலை 6:09 மணிக்கு சாய் பாபா வந்தபோது, கூடியிருந்த பக்தர்கள், ஸ்வாகதம், சுப ஸ்வாகதம் என முழங்கினர். பின்னர் ஹட்ஸியின் ஸ்ரீ ஹரி பஜனை மண்டல் குழுவினர் பஜனை பாடல்களைப் பாடினர். கவிதா சுப்பிரமணியம், சப்னா முகர்ஜி, நிதின் முகேஷ் ஆகியோருக்கு பாத்னாமஸ்கர் விருதுகளை சாய் பாபா வழங்கி கவுரவித்தார்.
கோயில் அமைப்பில் ஜாதவ் குடும்பத்தினர் சேவை: புனே. ஹட்ஸியில் சத்ய சாய் பாபா 3 நாள் தங்கிருந்தபோது அவரை சிவாஜிராவ் ஜாதவ் குடும்பத்தினரின் விருந்தாளியாக தங்கி இருந்தார். மிக எளிமையாக காட்சி அளிக்கும் சிவாஜிராவ் ஜாதவ், 2002ல் ஹட்ஸியில் இந்த சத்ய சாய் ஸ்ரீ பாண்டுரங்கா கோயிலுக்கான இடத்தை வாங்கினார். சாய் பாபாவின் வழிகாட்டுதலின்படி இந்த கோயிலைக் கட்டத் துவங்கினார். 2003ம் ஆண்டு ஜூலையில் கோயில் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. கோயிலைத் திறந்து வைக்குமாறு 2004ம் ஆண்டு மார்ச் மாதம் சாய் பாபாவை ஜாதவ் கேட்டுக் கொண்டார். 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 28ம் தேதி கோயிலுக்கு சாய் பாபா வருகை தந்தார்.
0 Response to "மும்பையில் சத்ய சாய் பாபா"
แสดงความคิดเห็น