jkr

வருட இறுதிக்குள் அரச நிறுவனப் பணியாளர் இடமாற்றம் : அமைச்சர் சரத் ஆலோசனை


அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பணிபுரிவோரின் இடமாற்றங்கள் அனைத்தையும் இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள அமைச்சர் சரத் அமுனுகம ஆலோசனை வழங்கியுள்ளார்.

இத்தகவலை அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.

அதேவேளை அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணி புரியும் அதிகாரிகளுக்கு விடயதானங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பணிபுரியும் அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் நடைமுறை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. எனினும் பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டுகளில் இவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய இடமாற்றங்களை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவதென பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம இது தொடர்பில் உரிய வழிகாட்டல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

இதற்கமைய டிசம்பர் மாதத்தில் இடமாற்றங்கள் நிகழ்வதுடன் விடயதானங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஜனவரி மாதத்தில் இடம்பெறும்.

அரசாங்கத்தின் சேவையை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் பொது நிர்வாக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அம்சமாகவே மேற்படி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வருட இறுதிக்குள் அரச நிறுவனப் பணியாளர் இடமாற்றம் : அமைச்சர் சரத் ஆலோசனை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates