காயத்திரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் - 76 ஆவது ஜயந்தி விழா

ஐப்பசி மாதம் 9ஆம் நாள் திங்கட்கிழமை 26.10.2009 காலை 8.00 மணிமுதல் நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்தில் ஸ்ரீ முருகேச மஹரிஷிகளின் ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் விஷேட அலங்கார பூஜைகள், யாகம், தியானம், பிரார்த்தனை ,பஜனை, அருளுபதேசம் மற்றும்,மகேஸ்வர பூஜைகள் என்பன நடைபெறவுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் சீடர்களும், பக்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீடம் தெரிவித்துள்ளது.
மேலும் அன்றைய தினம் தம்பிலுவில் ஸ்ரீகாயத்திரி தபோவனம், நாவலடி சப்தரிஷி வளாகம், திருகோணமலை ஆத்ம யோகஞான சபா ஆகிய இடங்களிலும் விஷேட பூஜைகள், அன்னதானம் என்பனவும் இடம்பெறும்.
பக்த அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு சற்குருமூர்த்தியின் பரிபூரண அருட்கடாஷ்த்தை பெற்றுய்யுமாறு நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.







0 Response to "காயத்திரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் - 76 ஆவது ஜயந்தி விழா"
แสดงความคิดเห็น