சிறுவர்கள் கடவுச்சீட்டுப் பெறுவதில் புதிய விதிமுறை

தாய் தந்தை இருவரது இணக்கப்பாட்டின் பின்பே சிறுவர்களுக்குக் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் இது அமுலில் இருக்குமெனவும் அறிவித்துள்ளது.
புது சட்ட விதிகளுக்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோரின் இணக்கப்பாட்டுக்குப் பின்பே கடவுச்சீட்டு வழங்கப்படுமென திணைக்களத்தின் அதிகாரி ரி.பி.அபயகோன் தெரிவித்தார்.
பெற்றோர் விவாகரத்துப் பெற்றிருப்பின் அல்லது சட்ட விதிகளுக்கு அமைய பிரிந்திருப்பின் நீதிமன்ற உத்தரவு அல்லது சட்ட ஆவணங்கள் பெற்றோர் சார்பாக சமர்ப்பிக்கப்படின் கடவுச்சீட்டு வழங்கப்படும்.இப்புதிய விதிமுறை சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களால் கடத்தப்படுவதைக் குறைப்பதற்காகவே அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.







0 Response to "சிறுவர்கள் கடவுச்சீட்டுப் பெறுவதில் புதிய விதிமுறை"
แสดงความคิดเห็น