jkr

செய்தியறிக்கை


நோபல் பரிசு தமிழகத்தில் பிறந்தவருக்கு கிடைத்துள்ளது
நோபல் பரிசு தமிழகத்தில் பிறந்தவருக்கு கிடைத்துள்ளது

சிதம்பரத்தில் பிறந்த தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு

தமிழகத்தில் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவருக்கு
வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரிபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் அவர் செய்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு அமெரிக்க விஞ்ஞானிக்கும், இஸ்ரேலிய விஞ்ஞானிக்கும் இதே பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.


ருவாண்டாவில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளி கைது

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் உகாண்டாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இடெல்போன்செ நிசெயிமன என்கிற இந்த மனிதர் தான்சானியாவில் நடக்கும் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாடுகடத்தப்பட்டுவருகிறார். இந்த தீர்ப்பாயத்தில் முக்கிய குற்றவாளியாக வர்ணிக்கப்படுகிறார்.

ருவாண்டாவின் டுட்சி அரசியையும், டுட்சி இன பேராசிரியர்களையும், கொல்வதற்கான ஆணைகளை இவர் பிறப்பித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. டுட்சி இன மக்கள் தப்பிச்செல்ல முடியாமல் சாலைகளில் தடுப்புக்களை ஏற்படுத்தி அவர்களை பிடித்துக் கொல்வதற்கும் இவர் ஆணையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவரது கைதை வரவேற்றிருக்கும் ருவாண்டா அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரி, இந்த நபர் ருவாண்டாவில் வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு

கண்ணாடி இழைத் தொழில்நுட்பம் தகவல் தொடர்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது
கண்ணாடி இழைத் தொழில்நுட்பம் தகவல் தொடர்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது

டிஜிட்டல் புகைப்பட தொழில் நுட்பத்தை உருவாக்கிய மற்றும் கண்ணாடியிழை வலையமைப்பு மூலம் உலகத் தகவல் தொடர்புகளை இணைக்க உதவிய பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இவ்வருடத்துக்கான பௌதீகவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கண்ணாடி இழையின் ஊடான ஒளியின் தொலைதூர பரிமாற்றத்தில் படைத்த புதுமைகளுக்காக சார்ள்ஸ் காவோ என்பவருக்கு இந்த பரிசின் அரைவாசியை ஸ்டாக்கோமில் இருக்கின்ற நடுவர்கள் வழங்கியுள்ளனர்.

அதேவேளை டிஜிட்டல் பிம்ப உணரி குறித்த கண்டுபிடிப்புக்காக அடுத்த அரைவாசிப் பகுதி வில்லார்ட் போயல் மற்றும் ஜோர்ஜ் ஸ்மித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


மங்கோலியாவில் மிகப் பெரும் முதலீடு

தாமிரக் கம்பிகள்
தாமிரக் கம்பிகள்

மங்கோலியாவின் தெற்குப்பகுதியில் உள்ள கோபி பாலைவனப்பகுதியில் இருக்கும் உலகின் மிக அதிக பட்ச தாமிரப்படிம சுரங்கங்களில் இருந்து கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான பல மில்லியன் டாலர் பெருமதியான ஒப்பந்தம் ஒன்றில் மங்கோலிய அரசாங்கம் கையெழுத்திட்டிருக்கிறது. ஆறு ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கனடா நாட்டை சேர்ந்த ஐவன்ஹோய் கனிம நிறு வனம், மற்றும் பிரிட்டிஷ் ஆஸ்திரேலிய கூட்டு நிறுவனமான ரியோ டிண்டோ ஆகிய நிறுவனங் களுடன் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல் என்று ரியோ காப்பர் மற்றும் டயமண்ட் குழுமத்தின் தலைமை அதிகாரியான பிரட் கிளைடன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மங்கோலியாவில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரும் முதலீடுகளில் ஒன்று இது என்று செய்தியாளர்கள் வர்ணிக்கிறார்கள். ஆசியாவின் ஏழை நாடுகளில் ஒன்றான மங்கோலியாவின் பொருளாதார வளர்ச்சியை இது மிகப்பெரும் அளவில் ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates