jkr

செய்தியறிக்கை


தாக்குதலில் சிக்கிய பொதுமகன்
தாக்குதலில் சிக்கிய பொதுமகன்

பாகிஸ்தான் பெஷாவரில் தற்காலைத் தாக்குதல் - 11 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவர் நகரில் காவல்துறை கட்டிடம் மற்றும் படைமுகாம்கள் உள்ள இடத்தின் அருகில் நடந்த கார்குண்டு தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தாக்குதலில் வேறு 15 பேர் காயமுற்றுள்ளனர்.

இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடந்ததாக ஆரம்பத்தில் போலிசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அக்கூற்றை பின்னர் அவர்கள் மாற்றிக்கொண்டனர்.

தாக்குதலில் வாகனங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதையும் பள்ளிவாசல் ஒன்று சேதமடைந்துள்ளதையும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்துவரும் தாக்குதல்களில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


ஜிம்பாவேயில் சுவாங்கிராய் கட்சியின் மூத்த உறுப்பினர் ராய் பென்னெட் விடுதலை

மோர்கன் சுவாங்கிராய்
மோர்கன் சுவாங்கிராய்
ஜிம்பாப்வேயில் பிரதமர் மோர்கன் சுவாங்கிராய்யின் கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான கட்சியுடைய மூத்த உறுப்பினரான ராய் பென்னெட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராய் பென்னெட் கைதானதை அடுத்து அரசாங்கத்தில் தங்களோடு கூட்டணி சேர்ந்துள்ள ஸானு பி.எஃப். கட்யுடன் ஒத்துழைப்பதை சாங்கிராய் நிறுத்திக்கொண்டுள்ளார்.

ராய் பென்னெட் சிறையில் இருக்கும் வரை தனது கட்சி அமைச்ச்சரவைக் கூட்டங்களிலோ அரசாங்க நடவடிக்கைகளிலோ பங்குகொள்ளாது என சாங்கிராய் தெரிவித்திருந்தார்.

ஜிம்பாப்வேயின் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயத்துறை துஅனி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த பென்னெட், சென்ற வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீதது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்

காசா விஜயத்தின் போது றிச்சர்ட் கோல்ட்ஸ்டோன்
காசா விஜயத்தின் போது றிச்சர்ட் கோல்ட்ஸ்டோன்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியோர் மீது போர்க்குற்றம் சுமத்தும், ''காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை'' ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வாக்களித்துள்ளது.

இந்த அறிக்கையை தென்னாபிரிக்க நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தயாரித்துள்ளார்.

அந்த சம்பவங்கள் குறித்து இரு தரப்பும் நம்பத்தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறுகின்ற அந்த அறிக்கை, அவ்வாறு செய்யா விட்டால் இரு தரப்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையின் மீது மாத்திரமல்லாமல், இந்த விடயத்தில் ஹமாஸை அல்லாமல் இஸ்ரேலை மாத்திரம் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கோருகின்ற பாலத்தீன ஆதரவு தீர்மானத்தின் மீது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் பிரத்தியேகமாக இஸ்ரேலை மாத்திரம் இலக்கு வைத்தமை தன்னை துக்கமடையச் செய்துள்ளதாக கோல்ட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமிய மதரஸாக்களில் ஆங்கில மொழிக் கல்வி

மதரஸாக்களில் பெண் சிறார்களுக்கான கல்வி
மதரஸாக்களில் பெண் சிறார்களுக்கான கல்வி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் இஸ்லாமிய மதப் பள்ளிக்கூடங்களான மதரசாக்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கு ஆங்கிலத்தை முக்கிய மொழியாக பயன்படுத்த ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மதரசாக்கள் இந்த முயற்சியை இந்தக் கல்வியாண்டின் தற்போதை தவணையில் ஆரம்பிக்கும் என்று சிறுபான்மையின விவகார அமைச்சர் அப்துஸ் சத்தார் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 566 மதரசாக்களும் இந்தத் திட்டத்தை இன்னும் சில வருடங்களில் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆங்கிலத்தின் பயன்பாடு இல்லாமல் மாணவர்கள் மிகத் தரமான கல்வியைப் பெற முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மதம் சார பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள தமிழர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில்

தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பல்
தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பல்

இந்தோனேசிய கடற்படையால் தடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் உள்ள 250க்கும் அதிகமான தமிழர்கள் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அவர்களை ஏற்க ஆஸ்திரேலிய மறுத்து வருகின்ற நிலையில் இந்த உண்ணாவிரதம் தொடர்கிறது.

இந்த கப்பலில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாக இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தின் குடிவரவுத் துறை தலைமை அதிகாரி ஹரி புருவான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய பான்டென் மாகாண குடிவரவுத்துறை தலைமை அதிகாரி ஹரி புர்வாண்டோ தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்தியாவில் அதிகரிக்கும் பசிக்கொடுமை - ஆய்வறிக்கைத் தகவல்

காங்கோ குடியரசு முகாமில் குழந்தையொன்று
காங்கோ குடியரசு முகாமில் குழந்தையொன்று
மக்களை பசிக்கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வளர்முக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை இந்தியாவைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஆனால் பிரேசிலையும் சீனாவையும் இந்த அறிக்கை பாராட்டியுள்ளது.

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா அமைந்திருந்தாலும், தொண்ணூறுகளின் மையப்பகுதியிலிருந்து நாட்டில் போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 3 கோடியால் அதிகரித்துள்ளது என்று அக்ஷன் எய்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. பசி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரேசில் அரசாங்கத்தை, அதன் நிலச் சீர்திருத்த திட்டங்களுக்காகவும், ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களுக்காகவும் இந்த அறிக்கை பாராட்டியுள்ளது.

சீனா தனது விவசாயிகளுக்கு உதவித் திட்டங்களை அறிவித்து 5 கோடியே 80 லட்சம் பேரை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவில் பட்ட மேற்படிப்பு

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி
இந்தியாவின் தொன்மையான பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைகக் கழகம், பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது.

காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகள் போன்ற கற்கை நெறிகள் ஏற்கனவே பல பல்கலைக் கழகங்களில் எம் ஏ பாட திட்டத்தில் இருப்பதாகவும், அதே போல தற்போது இந்தப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் தெரிவித்தார்.

ஆனால் கலைஞரைப் பற்றிய விமர்சனங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இருக்காது என்றும் பிற தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை ஒட்டிய முதுகலைப் பட்டங்கள் வரும் ஆண்டுகளில் துவக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது பற்றிய மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்


பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தலைமை செயல் அதிகாரியை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிப்பு

மார்க் ஹூப்பர் மற்றும் மைக் ஃபெனல்
மார்க் ஹூப்பர் மற்றும் மைக் ஃபெனல்
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஹூப்பரை நீக்க வேண்டும் என்று, போட்டிகளின் அமைப்புக்குழுத் தலைவர் சுரேஷ் கல்மாதி விடுத்த கோரிக்கையை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் நிராகரித்துவிட்டது.

மார்க் ஹூப்பர் டெல்லியில் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும், மாறாக, பணிகளுக்கு இடையூறாகத்தான் இருக்கிறார் என்றும், அவரை உடனடியாக சம்மேளனம் திரும்பப் பெற வேண்டு்ம என்றும் கல்மாதி நேற்று வியாழக்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

கடந்த வாரம், சம்மேளனத்தின் தலைவர் மைக் ஃபெனல் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் கட்டுமானப் பணிகளைக் கவனிக்க தொழில்நுட்பக் கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதையும் சுரேஷ் கல்மாதி நிராகரித்துவிட்டார்.

கல்மாதியின் கருத்துக் குறித்து இன்று வெள்ளிக்கிழமை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மைக் ஃபெனல், கல்மாதியின் கோரிக்கை ஆச்சரியமாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவை பற்றிய மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates