jkr

யாழ். கோட்டை ராஜதந்திரிகளின் விடுதி;பெளத்த பிக்கு ஒருவர் அதன் அதிகாரி: அரசு நடவடிக்கை


யாழ் நகரில் உள்ள புராதன கோட்டை பகுதியை ராஜதந்திரிகள் தங்குவதற்கான விடுதியாகப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பெளத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வணக்கத்திற்குரிய வரப்பிட்டிய ராகுல தேரர் என்ற இந்த பெளத்த பிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பதவியேற்றுள்ளார். பழைய பூங்கா வீதியில் இவருக்கென பிரத்தியேக அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இங்கிருந்து பணியாற்றவுள்ள இவர் யாழ். குடாநாட்டில் உள்ள தொல்பொருள் நிலையங்கள், புராதன இடங்கள் என்பவற்றை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் கோட்டே பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இவர் யாழ். அரச செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். கோட்டை ராஜதந்திரிகளின் விடுதி;பெளத்த பிக்கு ஒருவர் அதன் அதிகாரி: அரசு நடவடிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates