jkr

வெள்ளவத்தையில் கொள்ளை : சந்தேகநபர் விளக்கமறியலில்


வெள்ளவத்தையில் பெண் ஒருவரின் கைப்பையைக் கொள்ளை அடித்ததாகக் கூறப்படும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

இவர் கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதவான் ரிஷ்டன் டெலிவத்த முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர், குறித்த பெண்ணின் கைப்பையைக் கொள்ளை அடித்துச் சென்ற வேளையில், பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். குறித்த அமைச்சரினால் பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் நீதவான் அதனை மறுத்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெள்ளவத்தையில் கொள்ளை : சந்தேகநபர் விளக்கமறியலில்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates