jkr

தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன்? : ஜெயா கேள்வி

தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தி.மு.க. சார்பில் அண்மையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில், 1984 முதல் தமிழகத்துக்கு வந்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதாக அறிவிப்பதால் அவர்களுக்கு கூடுதலாக எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமைத் தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியன்மர் மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமைத் தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்? 'நிரந்தரக் குடியுரிமை' என்ற தகுதி காரணமாக அவர்களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களில் இருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவி அவர்களுக்கு அளிக்கப்படுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். சொந்த மண்ணில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக இலங்கையில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.

இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன்? : ஜெயா கேள்வி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates