jkr

ஆஸி. கடற்பரப்பில் மற்றுமொரு சட்டவிரோத படகு மீட்பு

அவுஸ்திரேலியாவில் நேற்றும் சட்டவிரோத படகு ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இந்தப்படகில் இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. சட்டவிரோத குடியேறிகளுடன் நாட்டுக்குள் நுழைய முற்பட்ட படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள அஸ்மோர் தீவுக் கடற்பரப்பில் வைத்து இந்த சட்டவிரோத படகு கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் பிரன்டன் ஒ கோனர், சட்டவிரோத படகில் பயணித்தோர் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் வருகை தந்த நோக்கம் மற்றும் உடல்நலம் தொடர்பில் கண்காணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஆஸி. கடற்பரப்பில் மற்றுமொரு சட்டவிரோத படகு மீட்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates