நால்வருக்கு மரண தண்டனை

கடந்த1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நால்வருக்கு அனுராதபுர மேல் நீதிமன்றத்தால் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வடமத்திய மாகாணப் பிராந்திய மேல்நீதிமன்ற நீதிபதி மேனக்கா விஜேசுந்தர முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
1999 ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அல்லது அண்மித்த நாள் ஒன்றில் மரதன்கடவல பகுதியில் ஒருவரைத் தாக்கி கொலைச் செய்ததாகப் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகளை குற்றவாளிகளென தீர்ப்பளித்த மேல்நீதிமன்ற நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.
அனுராதபுரம் மரதன்கடவல பகுதியைச் சேந்த பிரபல வர்த்தகர் உள்ளிட்ட நான்கு வர்த்தகர்களுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.







0 Response to "நால்வருக்கு மரண தண்டனை"
แสดงความคิดเห็น