செங்கல்பட்டு முகாமில் இருக்கும் இலங்கை அகதிகளை சந்திக்க பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுப்பு
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பழ.நெடுமாறன் திரும்பி சென்றார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்கு விரைவாக முடித்து சொந்த நாட்டிற்கு அனுப்ப வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்ட அகதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
15 வது நாளாக இந்த போராட்டம் நீடிக்கிறது. ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அகதிகளை சந்திக்க சென்ற போது போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமுக்கு வந்தார். அப்போது அவரது காரை முகாமிற்கு 5 மீட்டர் தூரத்திற்கு அப்பால் போலீசார் தடுத்து நிறுத்தினர். முகாமிற்குள் செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர்.
உடனே பழ.நெடுமாறன் காரில் இருந்து இறங்கி முகாம் வாசல் வரை நடந்து சென்றார். போலீசாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அகதிகளின் நிலை குறித்து போலீசாரிடம் விசாரித்து விட்டு பழ.நெடுமாறன் புறப்பட்டார்.







0 Response to "செங்கல்பட்டு முகாமில் இருக்கும் இலங்கை அகதிகளை சந்திக்க பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுப்பு"
แสดงความคิดเห็น