jkr

மாணவிகள் விடுதியில் பிடிபட்ட 100 பாம்புகள்!


நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி விடுதியைச் சுற்றி புதர்கள் இருப்பதால் நூறு பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. விடுதியை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் காணப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து, நிர்வாகத்திடம் மாணவிகள் முறையிட்டனர். பாம்புகளை பிடிக்க மருத்துவ அலுவலர் மோகன் நடவடிக்கை எடுத்தார். மேலப்பாளையம், மானாமதுரை, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளிகள் மாரியப்பன், சாத்தாகுட்டி, கண்ணன் உட்பட 8 பேர் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் மகுடி ஊதினர். அப்போது முட்புதரில் இருந்து நல்லபாம்பு, கட்டுவிரியன், சாரைபாம்பு உட்பட 25 பெரிய பாம்புகளும், 75 சிறிய பாம்புகளும் சீறியபடி வெளியே வந்தன. அவற்றை பாம்பாட்டிகள் பிடித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மாணவிகள் விடுதியில் பிடிபட்ட 100 பாம்புகள்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates