நிர்வாணமாக போஸ் கொடுத்தார் செரீனா வில்லியம்ஸ்
ஈ.எஸ்.பி.என். என்ற பத்திரிகைக்கு உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இதனால் அவர் ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படலாம் என்று தெரிகிறது.இதனால் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு செரீனா வில்லியம்ஸின் இத்தகைய நடவடிக்கை மீது விசாரணை செய்து வருகிறது. விசாரணை முடிவில் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓரிரு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இவர் கால்களை தவறாக வைத்தார் என்று ரீ-சர்வ் செய்ய நேரிட்டது. அப்போது லைன் நடுவரை கடுமையான சொற்களால் மிரட்டியுள்ளார் செரீனா வில்லியம்ஸ். இதற்காக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர கிம் கிளிஸ்டர்ஸிடம் தோல்வி அடையும் பயத்தில் அவரை தாக்குமாறு டென்னிஸ் மட்டையை உயர்த்திக் காட்டியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
இந்த சர்ச்சைகளெல்லாம் முடிவதற்குள் ஈ.எஸ்.பி.என். பத்திரிக்கையின் முகப்பு அட்டைக்காக தற்போது நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
தற்போது செரீனா மீது தடை விதிக்கப்பட்டால் அவர் தனி தீர்ப்பாயத்திடம் மேல் முறையீடு செய்யலாம்.







0 Response to "நிர்வாணமாக போஸ் கொடுத்தார் செரீனா வில்லியம்ஸ்"
แสดงความคิดเห็น