jkr

ஏறாவூரில் விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனையின் போது வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் மீராக்கேணி மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இம் மாணவர்களுக்கு இரும்புச் சத்து மற்றும் விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் ,இம் மாத்திரைகளை உட் கொண்டு சற்று நேரத்தில் தலைச் சுற்று வயிற்று வலி ,மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக இச் சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

"மாத்திரை உட்கொண்டதையடுத்து வயிற்றில் ஏற்பட்ட எரிவுத் தன்மையே இத் திடீர் சுகவீனத்திற்கு காரணம்." என மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.சி.எம். பலீல் கூறுகின்றார்.

"ஏறாவூர் பிரதேச பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 10 வரையில் மாணவர்களுக்கு போசணையினை மேம்படுத்தும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடக்கம் 6 மாத காலத்திற்கு இரும்புச் சத்து, போலிக் அமிலம் மாத்திரைகள் வழங்கும் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகாரம் உட் கொள்ளாத மாணவர்கள் இந்த மாத்திரைகளை உட் கொள்ளும் பட்சத்தில் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதற்கு வாயப்புகள் உள்ளது" என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். தாரிக் இது தொடர்பாக கேட்ட போது தெரிக்கின்றார்.

வைத்தியசாலை தகவல்களின் படி சிகிச்சைக்காக வருகை தந்த மாணவர்களில் கணிசமான தொகையினர் சிகிச்சையின் பின்பு தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் ஒரு சில மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஏறாவூரில் விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates