jkr

இந்தோனேசியாவில் கைதானவர்களில் இலங்கையர் இருந்தால் அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் -இலங்கை வெளிவிவகார அமைச்சர்!


இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள குடியேற்றவாசிகள் மத்தியில் இலங்கையர்கள் எவராவது இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தோனேசிய சட்டத்திட்டங்களுக்கு அமைவாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அமைச்சர் போகொல்லாகம நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம தொடர்தும் தெரிவிக்கையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதேபோன்ற சட்டவிரோத குடியேற்றவாசிகளை கொண்ட கப்பலொன்றே தற்போது இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப் பட்டுள்ளது சட்டவிரோத குடியேற்றவாசிகளினால் அவர்கள் வாழும் நாட்டிற்கு எப்போதும் அபகீர்த்தியே ஏற்படுகிறது. அந்தவகையில் இலங்கையின் பிரஜை ஒருவர் இலங்கைக்கு எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. இதுதொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் அதாவது இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இலங்கையர்கள் உள்ளனரா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் தகவல்கள் உறுதிப்படுத்தப்படின் குறித்த இலங்கையர்களுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தோனேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தோனேசியாவில் கைதானவர்களில் இலங்கையர் இருந்தால் அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் -இலங்கை வெளிவிவகார அமைச்சர்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates